திங்கள், 27 ஜூலை, 2015

பஞ்சாப்பில் 12 மணி சண்டை முடிவுக்கு வந்தது: தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்


பஞ்சாப்பில் ராணுவ வீரர்களின் உடையில் நுழைந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மூன்று பேரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் இன்று அதிகாலையில் ராணுவ வீரர்களின் உடையில் வந்த தீவிரவாதிகள் அவ்வழியாக வந்த பேருந்தின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் அங்கிருந்த காவல்நிலையத்தின் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை 12 மணி நேரத்திற்கு பின்பு மாலையில் முடிவுக்கு வந்தது. இதில் போலீசார் நடத்திய தாக்குதலில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மூன்று பேரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் எஸ்.பி உள்ளிட்ட 7 பேர் மரணம் அடைந்தனர்.பஞ்சாப் தாக்குதல் எதிரொலியாக தலைநகர் டெல்லி, அசாம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனிடையே இத்தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அவசர உயர்மட்டக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்த தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் நாளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்  maalaimalar.com 

கருத்துகள் இல்லை: