மது ஒழிப்பிற்காக நீண்டகாலமாக பல்வேறு முனைகளில்
அமைதியான முறையில் போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் தமிழக
ஆட்சியாளர்களின் அலட்சியப்போக்கு காரணமாக தமது உயிரை இழக்க வேண்டிய அவலநிலை
இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம்
பகுதியில் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி செல்பேசி கோபுரத்தின் உச்சியில்
ஏறி தமது கோரிக்கைகளை வலியுறுத்த போராட்டத்தில் ஈடுபட்டபோது இந்த துயர
சம்பவம் நிகழ்ந்துள்ளது. செல்பேசி கோபுரத்தின் உச்சியில் 5 மணி நேரமாக
அமர்ந்து தமது கோரிக்கையை வலியுறுத்தி குரல் கொடுத்து போராட்டத்தில்
ஈடுபட்டபோது அவரை காப்பாற்ற மாவட்ட ஆட்சியாளர்களோ, காவல்துறையினரோ எந்த
நடவடிக்கையும் எடுக்க முன்வராததுதான் சசிபெருமாள் உயிரிழப்புக்கு முக்கிய
காரணமாகும். தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியமிக்க ஆணவப் போக்கின் காரணமாகவே
அவர் தமது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய பரிதாபகரமான நிலை இன்றைக்கு
ஏற்பட்டுள்ளது.
தமது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாது என்ற நிலை
ஏற்பட்ட பிறகு செல்பேசி கோபுரத்தின் மீது ஏறி, போராட்டம் நடத்த வேண்டிய
முடிவுக்கு வந்தார்.
தியாகி சசிபெருமாள் உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று இளங்கோவன் கூறியுள்ளார் dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக