மும்பையில் 1993ஆம் ஆண்டில் நடைபெற்ற
தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததாகக்
குற்றஞ்சாட்டப்பட்ட யாக்கூப் மேமனின் கருணை மனுவை இந்திய குடியரசுத் தலைவர்
நிராகரித்துள்ளார்.
மத்திய அரசின் ஆலோசனையை ஏற்று இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
முன்னதாக, புதன் கிழமையன்று காலையில் யாகூப் மேமன் தாக்கல் செய்திருந்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது. யாக்கூப் மேமன் தூக்கிலிடப்படக் கூடாது என்று பல போராட்டங்கள் நடைபெற்றன. மும்பை குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றங்கள் அளித்த மரண தண்டனைத் தீர்ப்பை, கருணைகாட்டி ரத்து செய்ய வேண்டும் என்று மேமன் அளித்திருந்த மனுக்கள் தோல்வியில் முடிவடைந்திருந்தன.
தேவேளை மரண தண்டனையை நிறுத்தக் கோரிய அவரது மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து மராட்டிய மாநில ஆளுநரிடம அவர் அளித்த கருணை மனுவும் உடனடியாக நிராகரிக்கப்பட்டுள்ளது. நாளை அதாவது இம்மாதம் 30ஆம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று மராட்டிய அரசு அறிவித்த நிலையில், மரண தண்டனை நிறைவேற்றத்துக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விதத்தில் சரியான சட்டவழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி யாக்கூப் மேமன் மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றார்.
அந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால், தலைமை நீதிபதியால் வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு இன்று விசாரிக்கப்பட்டது.
இதையடுத்தே அவரது மனுவை நிராகரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மும்பையில் நடந்த இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில், குறைந்தது 257 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 700 பேர் காயமடைந்தனர்.
1993ல் மும்பையில் நடைபெற்ற கலவரங்களில் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களின் மரணங்களுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த தொடர்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன.
இந்த குண்டுவெடிப்புகள் நடப்பதற்கு முன்னதாகவே இந்தியாவை விட்டு தப்பிய யாகூப் மேமனின் சகோதர்ர் டைகர், இந்த கொடிய தாக்குதல்களில் முக்கிய பங்குவகித்தவர் என்று அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர் bbc.tamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக