வியாழன், 4 டிசம்பர், 2014

ஸ்ரீரங்கத்தின் கீதையே ! அதிமுக அடிமைகளின் நெஞ்சத்து அகலாதசுகபாணி அருள்வாயே அபிராமியே அந்தாதியே?

சென்னை: சட்டசபையில் முதல்வர் பன்னீர்செல்வம் பேச துவங்குகையில், ஸ்ரீரங்கத்தின் கீதையே ! தமிழர் வாழ்வு செழிக்க, விழி காட்டி, வழி காட்டியாக திகழும், அம்மா என்ற மூன்றெழுத்து மந்திரமே ! காலத்தால் அள்ளித்தந்த தங்கமே ! வாழும் ஏழைகள் வாழ்வில் ஒளி ஏற்றிய பூரண ஒளியேற்றும் புண்ணியமே ! ஏழை தொழிலாளிகள் உரிமை, காவரி முல்லை பெரியாறு மீட்ட விலையில்லா அருள் அள்ளித்தரும் வெல்லாமை காட்டிய வீர மங்கையே ! எதிர்காலத்தில் வெப்ப சலணம் அடையும் என தீர்க்க தரிசனத்தால் மண்ணை குளிர்விக்க மழை நீர் திட்டம் தந்த மாதரசியே ! மண்ணுக்கு நீரும் , மாணவர்களுக்கு மடிக்கணினியும் தந்த தாயே ! செந்தமிழே ! தியாகமே உருவான திரும்ங்கையே ! தாயே ! தாங்கள் வீற்றிக்கும் திசை நோக்கி தலைவணக்கம் தெரிவித்தார். ஸ்ரீரங்கத்தின் கீதையே ! இவ்வாறு வர்ணிக்கும் போ அவையில் கரவொலி எழுந்தது.
ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்தபோது சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மு.க. ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டை மறுத்து, சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அது தொடர்பான விளக்க அறிக்கை ஒன்றை வாசித்தார்.  பதவி பணத்துக்காக  தன்மானத்தையும் விற்கும் அடிமை கூட்டம் வார்த்தைகள் இல்லை ! தூத்தேறி.....அசிங்கப் பிழைப்பு.....இதுதான் சுய மரியாதையா?..
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது: மக்கள் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களால் சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஒரு பொய்யான குற்றச்சாட்டை தி.மு.க.வினர் அடிக்கடி எழுப்பி வருகின்றனர். அதிலும், குறிப்பாக சட்டமன்ற தி.மு.க. குழுவின் தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே, 110 விதியின் கீழ் செய்யப்பட்ட அறிவிப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஒரு உண்மைக்கு மாறான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

2011-12 ஆம் ஆண்டு விதி எண் 110-ன் கீழ், 51 திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அறிவித்தார்கள். இதில் 51 திட்டங்களுக்கும் அரசாணைகள் வெளியிடப்பட்டு, 39 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 11 திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஒரு திட்டம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

2012-13 ஆம் ஆண்டு, விதி எண் 110-ன் கீழ், 87திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அறிவித்தார்கள். இதில் 83 திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு, 48 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 34 திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஒரு திட்டம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மீதமுள்ள 4 திட்டங்கள் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளன.

2013-14 ஆம் ஆண்டு, விதி எண் 110-ன் கீழ், 292 திட்டங்களை அறிவித்தார்கள். இதில் 287 திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு, 126 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 161 திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒரு திட்டம் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. 4 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட வேண்டி உள்ளது. 2014-15 ஆம் ஆண்டு, விதி எண் 110-ன் கீழ் 236 திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அறிவித்தார்கள். இதில் 116 திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு, 5 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 111 திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.தினமலர்.com

கருத்துகள் இல்லை: