மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதல், ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து
சென்று மாநில கட்சிகளை நடத்தி வந்த முக்கிய தலைவர்களான முலாயம் சிங் யாதவ்,
லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், சரத் யாதவ் மற்றும் முன்னாள் பிரதமர்
தேவேகவுடா ஆகியோர் ஓரணியில் இணைந்தனர். இத்தலைவர்கள் கலந்து கொண்ட முதல்
கூட்டம் கடந்த மாதம் டெல்லியில் உள்ள முலாயம் சிங் யாதவ் வீட்டில்
நடைபெற்றது. வைகோவும் ராமதாசும் திமுக பக்கம் வருவது போல் தெரிந்தது ஆனால் திடீரென்று பல்டி அடித்து இனி திமுக அதிமுக வோடு கூட்டணியே கிடையாது என்று சொன்னதன் மர்மம் இதுதான் போலும்? தமிழ்நாட்டில் சாமஜவாடி ஜனதாதள் கூட்டணியில் வைகோ முதலில் சேருவார் பின் ராமதாஸ் கம்யுனிஸ்ட் .... ஏதோ நல்லது நடந்தால் சரி, ஆனா வைகோ எப்படியும் தப்பான முடிவுதான் எடுப்பார் என்பது அவர் ஜாதகம் அதாய்ன் ரோசனையா கீது
அப்போது பா.ஜ.க.வுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் முலாயம் சிங் வீட்டில் தலைவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அப்போது பா.ஜ.க.வுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள கட்சிகளை ஒரே கட்சியாக இணைக்கும் பொறுப்பை முலாயமுக்கு வழங்க அவர்கள் முடிவெடுத்தனர். தங்கள் கூட்டணிக்கு சமாஜ்வாதி ஜனதா தளம் என்ற புதிய பெயர் வைக்கவும் அவர்கள் முடிவு செய்தனர்.
இக்கூட்டத்திற்கு பின் பேசிய நிதிஷ்குமார் கூறியதாவது;
நாங்கள் அனைவரும் ஏற்கனவே ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறோம். இனி அடுத்த கட்டமாக ஒரே கட்சியின் கீழ் அனைவரையும் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம். இப்பணியை முலாயம் சிங் யாதவ் அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்துவார் என்று நிதிஷ் கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக