செவ்வாய், 2 டிசம்பர், 2014

போலீசார் சீருடையில் மினி கேமரா: ஒபாமா அதிரடி! கருப்பினத்தவர் மீது துப்பாக்கி சூடு எதிரொலி?

வாஷிங்டன்: அமெரிக்காவின் பெர்க்யூசன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் கருப்பினத்தை சேர்ந்த வாலிபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல், பொம்மை துப்பாக்கி வைத்திருந்த 12 வயது சிறுவனை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர். எவ்வித விசாரணையும் இன்றி கருப்பினத்தை சேர்ந்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், இப்பிரச்னை குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று மனித உரிமை ஆர்வலர்கள், சட்டத்துறை வல்லுநர்களை சந்தித்து பேசினார். காவல் துறை விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டுவர உள்ளதாக தெரிவித்த ஒபாமா, சம்பவத்தின் உண்மை தன்மையை கண்டறியும் வகையில், போலீசாரின் சீருடையில் சிறிய அளவிலான கேமரா பொருத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.


மூன்று மாதங்களுக்குள் 50,000 கேமராக்கள் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவித்த ஒபாமா, இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்த வழிவகை செய்யப்படும் என ஒபாமா கூறினார்.அமெரிக்காவில் உள்ள லவுரெல், மேரிலேண்ட் ஆகிய நகரங்களில் போலீசார் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில் இத்திட்டம் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. - See /tamilmurasu.org

கருத்துகள் இல்லை: