இளங்கோவன் பேச்சு உண்மையான
காங்கிரஸ் தொண்டர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நஞ்சாக இருந்தவர்கள்
ஒதுங்கி போய் விட்டனர். என கட்சியினருக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
வேண்டுகோள் விடுத்து உள்ளார்.திண்டுக்கல்
மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல் நாயுடு
மகாலில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,உண்மையான
காங்கிரஸ் தொண்டர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நஞ்சாக இருந்தவர்கள்
ஒதுங்கி போய் விட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க.
நிர்வாகிகள், அடுத்த தேர்தலை பற்றி சிந்திக்காமல் வாசனுக்கு ஆட்களை
சேர்த்து கொண்டிருக்கும் புரோக்கர்களாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.மூப்பனாரை
பற்றி தவறாக நான் சொல்லி விட்டதாக அருமை தம்பி ஜி.கே.வாசன் சொல்கிறார்.
எனக்கு தனிப்பட்ட குடும்ப சூழ்நிலையில் மூப்பனார் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரை குறை சொல்லவில்லை. ஆனால் பெருந்தலைவர் காமராஜர், சிவாஜி கணேசன் போல காங்கிரஸ் கட்சிக்காக அவர் எதுவும் செய்யவில்லை.டெல்லியில் இருந்தபடியே சில மாநிலங்களில் நடந்த கட்சி பிரச்சினைகளை அவர் தீர்த்து வைத்திருக்கிறார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்தியதில் மூப்பனாருக்கு எந்த பங்கும் இல்லை. காங்கிரஸ் உறுப்பினர் அட்டையில் காமராஜர், மூப்பனார் படத்தை போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வெளியேறியதாக கூறுகின்றனர். மூப்பனார் படத்தை போட்டால் சிவாஜி கணேசன், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோரது படங்களையும் போட வேண்டும் என்று கட்சியினர் கூறினர். பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர். போல மூப்பனாரை பற்றி எதுவும் சொல்ல முடியாது. பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்ததால் அவர்கள் சென்று விட்டனர். கடந்த ஒரு மாதமாக, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் எழுச்சியோடு உள்ளனர்.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 4 சதவீதம் மட்டுமே ஓட்டுகள் இருக்கிறது என்று கூறுவது கட்டுக்கதை ஆகும். இன்னும் 1½ ஆண்டுகளில் நடைபெறுகிற 2016 சட்டமன்ற தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சிக்குரிய ஓட்டுகளை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தல் தோல்வியை நினைத்து சோர்ந்து இருக்காமல், 2016–ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக இப்போதிருந்தே நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசினார். nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக