சனி, 6 டிசம்பர், 2014

சோனியா : காங்கிரஸ் கொண்டு வந்த நலத்திட்டங்களை பாஜக கைவிட்டது வேதனை !

ரேபரேலி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை மத்திய பாஜ அரசு கைவிட்டிருப்பது கவலையை அளிக்கிறது என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில நாட்களாக தனது தொகுதியான ரேபரேலியில் சுற்றுபயணம் செய்து வருகிறார். பர்சத்கஞ்ச் விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை மாலின் கா பூர்வா கிராமத்திற்கு திடீர் விசிட் அடித்தார். இது தலித்துகள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமமாகும். அங்கு சென்ற அவரை கிராம பெண்கள் சூழ்ந்து கொண்டு கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், இந்திரா வீடு கட்டும் திட்டம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்கள் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக புகார் அளித்தனர்.


இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்பதை சோனியாவுக்கு நெருக்கமான அதிகாரிகளும் உறுதி செய்தனர். மத்திய அரசின் நடவடிக்கை ஏமாற்றம் அளிப்பதாக சோனியா காந்தி தெரிவித்தார்.  இதுகுறித்து சோனியா காந்தி கூறுகையில், கிராமத்தில் சுய உதவி குழுக்கள் கலைக்கப்பட்டு விட்டதாக பெண்கள் என்னிடம் கவலை தெரிவித்தனர். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் உள்பட பல்வேறு நலத் திட்டங்களையும் மத்திய அரசு கைவிட்டுள்ளது கவலை அளிக்கிறது என்றார். அங்கிருந்து புறப்பட்ட சோனியாவின் காரை உத்தரபிரதேச அரசின் கஸ்தூரிபா பள்ளியில் பணிபுரியும் 12 ஆசிரியையைகள் வழிமறித்தனர். காரை விட்டு இறங்கிய சோனியா அவர்களிடம் குறைகளை கேட்டார். அப்போது அவர்கள் தங்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை. அதனை வழங்க ஏ - tamilmurasu.org

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நிழலின் அருமை வெயிலில் சென்றால்தான் தெரியூம்