ஞாயிறு, 30 நவம்பர், 2014

அமெரிக்காவில் கருப்பின வாலிபர் மைக்கேல் பிரவுனை சுட்டுகொன்ற போலீஸ்காரர் பதவி விலகல்

அமெரிக்காவில் மிசோரி மாகாணம், பெர்குசனில் கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி, மைக்கேல் பிரவுன் என்ற கருப்பின வாலிபரை டேரன் வில்சன் என்ற வெள்ளை இன போலீஸ் அதிகாரி சுட்டுக்கொன்ற சம்பவம், அங்கு தொடர் போராட்டங்களுக்கு வழி வகுத்தது. இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி டேரன் வில்சன் மீது நீதிமன்றத்தில் குற்ற விசாரணை நடத்த தேவையில்லை என ஜூரிகள் குழு கடந்த 24-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இது கறுப்பின இனத்தவர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது சுட்டுக்கொல்லப்பட்ட பிரவுனின் குடும்பத்தினர், ஜூரிகளின் தீர்ப்பு அநீதியானது என கூறினர்.
இதையடுத்து சம்பவம் நடந்த பெர்குசனில் கலவரம் ஏற்பட்டது. கலவரக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர். அங்கு ஒரு கார் தீயிட்டு கொளுத்தப்பட்டது. 12 வணிக கட்டிடங்கள் கொளுத்தப்பட்டன. பல வணிக நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தொடர் பதற்றம் காரணமாக அங்கு 2 ஆயிரத்து 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் மைக்கேல் பிரவுனை சுட்டுக்கொன்ற போலீஸ்காரரான டேரன் வில்சன் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தால் கருப்பின சமூகம் ஆறுதல் அடையும் என்று நம்புவதாகவும் வில்சன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: