திங்கள், 9 ஜூன், 2014

பார்ப்பனர்களுக்கு எதிரான பேச்சு , கி,வீரமணி மீது வழக்கு

பிராமணர்களுக்கு எதிராக பேசுவதற்கும் போராடவும் கி.வீரமணி, கோவை ராமகிருஷ்ணன் ஆகியோருக்குத் தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  சிவகாசி வழக்குரைஞர் வி.கார்த்திகேயன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
   மனு விவரம்: தஞ்சை மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஹோட்டல் ஸ்ரீகிருஷ்ண அய்யர் பிராமணாள் கபே விளம்பர பலகையை அகற்றுமாறு நவ.2012-ல் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலர் கோவை ராமகிருஷ்ணன் போராட்டம் நடத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக திருவானைக்காவலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நடத்திய போராட்டத்தில் பிராமண வர்ணாசிரமத்தை அனுமதிக்க முடியாது என வன்முறையை தூண்டும் விதமாக வீரமணி பேசியுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு ஜாதியினர் பெயர்களில் நிறுவனங்களின் பெயர்பலகைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் மெட்டீரியலிசம், கம்யூனிசம், சோசலிசம், கேபிடலிசம், காந்தியிசம், தலித்திசம் என பலதரப்பட்ட தத்துவங்களை மக்கள் ஏற்றுகொண்டுள்ளனர். எனவே ஹோட்டல் பெயர்ப் பலகையை அகற்றுமாறு கோருவதும் பிராமணீயத்தை கண்டித்து பேசுவதும் தனிமனிதசுதந்திரம் தொடர்பான அரசியலமைப்பு சட்ட உரிமைக்கு எதிரானது.
பிராமணர்களுக்கு எதிரான போராட்டத்துக்கு தடைவிதிக்குமாறு தலைமைச் செயலர்,உள்துறைசெயலர் ஆகியோருக்கு 2013 ஆம் ஆண்டில் இருமுறை மனுக்களை அனுப்பிய போதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே பிராமணர்களுக்கு எதிராக பேசவும் போராடவும் கி.வீரமணி மற்றும் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோருக்குத் தடைவிதிக்க வேண்டும்.பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாக பேசவதால் இருவரையும் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  இம்மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வ முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். dinamani.com

கருத்துகள் இல்லை: