வெள்ளி, 13 ஜூன், 2014

உமாபாரதி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட மாட்டாது ! நதிகளை எல்லாம் இணைக்க போறோம்ல ?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான திட்டம் எதுவும்,
பரிசீலனையில் இல்லை. இப்பிரச்னையில், உச்ச நீதிமன்றம் கூறும் அறிவுரைக்கு ஏற்ப, மத்திய அரசு முடிவு எடுக்கும்,'' என, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி கூறினார்.
டில்லியில் நேற்று, நிருபர்களைச் சந்தித்த, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியிடம், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கோரிக்கை விடுத்திருந்தார். இது விஷயமாக, அமைச்சக குறிப்பு தயாரிக்கப்பட்டு, அதிகாரிகளின் பார்வையில் இருப்பதாக, செய்தி வெளியாகி உள்ளது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநில அனைத்துக் கட்சிக் குழு, பிரதமரை சந்தித்து உள்ளது. இந்நிலையில், இப்பிரச்னையில், மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் நிலை என்ன?' என்று, கேள்வி எழுப்பப்பட்டது.  
பிஜேபி க்கு ஒட்டு போட்ட தமிழன் முதுகுல குத்தும் வண்ணம் உள்ளது..இல்.கணேசன் கருத்து விஷமத்தனமான ஒன்று.2016 இல் இங்கு பிஜேபி கூட்டணி முற்றிலும் புறக்கணிக்க படும்..தமிழக அராசு உடன் நீதிமன்றத்தை நாடவேண்டும் ..


இதற்கு பதில் அளித்த, அமைச்சர் உமாபாரதி கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, எந்த ஒரு திட்டமும், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இல்லை. இப்பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் என்ன அறிவுரை கூறுகிறதோ அதை மட்டுமே, மத்திய அரசு பின்பற்றும். இதுவரை, உச்ச நீதிமன்றத்தில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அவ்வாறு வரும் போது, அதை, நீர்வளத்துறை அமைச்சகம் நிச்சயம் நிறைவேற்றும். எந்த ஒரு மாநிலத்திற்கும், மத்திய அரசு அநீதி இழைக்காது. அனைத்து மாநிலங்களையும், சரிசமமாக நடத்த விரும்புகிறது. எனவே, இவ்விஷயத்தில், யாரும் அவசரப்பட்டு, எந்த ஒரு நிலையையும் எடுக்க தேவையில்லை. இவ்வாறு, உமா பாரதி கூறினார். இதே பிரச்னை குறித்து, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், வெங்கையா நாயுடுவிடமும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், ''காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத போது, அது விஷயமாக, நான் எப்படி பதில் அளிக்க முடியும்?'' என்றார்.




கடந்து வந்த பாதை...


* வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, காவிரி நதிநீர் பிரச்னையை தீர்க்க, நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

* கடந்த, 1990 ஜூன் 2ம் தேதி, நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி தலைமையில், மூன்று பேர் அடங்கிய, காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

* கடந்த, 2007 பிப்ரவரி 5ம் தேதி, காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.

* காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, 2013 பிப்ரவரி, 20ம் தேதி, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

* காவிரி நடுவர் மன்ற இறு தித் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. அதனால், இம்மாதம், 3ம் தேதி, பிரதமர் மோடியை சந்தித்து, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை மனு அளித்தார்.



வெளியான செய்தி என்ன?

'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என, சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துவக்கி விட்டது என்றும், மத்திய அமைச்சரவை செயலகம், இது தொடர்பான வரைவு ஒன்றை தயாரித்து, சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளதாகவும், நேற்று செய்தி வெளியானது. சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், அந்த வரைவு, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படும். அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான, அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, பணிகள் தீவிரம் அடையும் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தகவலையே, மத்திய அமைச்சர் உமா பாரதி மறுத்துள்ளார். இதன்மூலம், கர்நாடகாவின் எதிர்ப்பை மீறி, காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்க முற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள், பொய்யாகி உள்ளன.



சாத்தியமில்லை!

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்க முடியாது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறும் வரை, மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான சாத்தியமில்லை.

பாலி நாரிமன், மூத்த வழக்கறிஞர்

கர்நாடகத்தில், பா.ஜ., வலுவாக உள்ளது என்பதால், அம்மாநிலத்துக்கு சாதகமாகவே, மத்திய அரசு செயல்படும் என்ற கருத்து, இதன்மூலம் பொய்யாக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, மத்திய அரசின் பரிசீல னையில் உள்ளது என, அமைச்சர் உமாபாரதி கூறியுள்ளது, நம்பிக்கை ஏற்படுத்துகிறது.

நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க., கொ.ப.,துணை செயலர்

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின்படி, வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கையை, மத்திய அரசு எடுத்து வருகிறது என்பதை, உமாபாரதி கூறியுள்ளார். தமிழகத்தின், நீண்ட கால கோரிக்கை நிறைவேறுகிறது என்பது, இதன்மூலம் தெரிகிறது.

இல.கணேசன், பா.ஜ., மூத்த தலைவர்

தமிழகம், கர்நாடக மாநிலங்கள் பாதிக்காத படி, நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அமைச்சர் கூறியுள்ளது வரவேற்புக்குரியது. அதே நேரத்தில், நியாயம் கேட்டு நிற்பவர்களையும், தண்ணீர் தராமல் வஞ்சிப்பவர்களையும், சமமாக பாவிப்பது, பிரச்னையில் ஒருதலை பட்சமாக நடந்து கொள்வரோ என்ற, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கோவி. செழியன், தி.மு.க.,- எம்.எல்.ஏ.,

- நமது டில்லி நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: