வியாழன், 12 ஜூன், 2014

மனுஷ்யபுத்திரன் கமல் போன்ற பார்ப்பன அறிவாளிகளுக்கு ஒரு இஸ்லாமிய துருப்புச் சீட்டாக ...

2

//மனுஷ்யபுத்திரனை மறுத்துவிட்டு தான் உங்களை வாசிக்கனுமா தோழர்?// - Ansari Thameemull.
என்னை வாசிப்பதை விடுங்கள்…
திராவிட இயக்க உணர்வு பொங்குகிற மனுஷ்யபுத்திரன், தனது உயிர்மை பதிப்பகத்தின் சார்பாக எழுத்தாளர்களுக்கு தருகிற விருதின் பெயர் ‘பெரியார் விருதா?’ இல்லை, அவர் அதிகம் கொண்டாடுகிற ‘கலைஞர் விருதா?’
இவர்கள் பெயரில் விருது இல்லை என்பது கூட பிரச்சினையில்லை. ஆனால், பெரியாரை விரோதியாக, திராவிட இயக்கத்தை கேவலமாகப் பார்த்த இந்து, பார்ப்பன ஜாதி வெறியர் சுஜாதா பெயரில் தான் அந்த விருது.
சரி, திராவிட இயக்க உணர்வை விடுங்கள். இலக்கியத்தில் தகுதி குறித்து அதிகம் பேசுகிற மனுஷ்யபுத்திரன்,
தனக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்தவர் என்ற ஒரே காரணத்திற்காக தகுதியற்ற எழுத்தாளர் சுஜாதா பெயரில் விருது வழங்குவதுதான் இலக்கியத்திற்கான தகுதியா?
இஸ்லாமியர்களை துரோகிகளாக சித்திரித்து கமல் எடுத்த உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம் படங்களுக்கு அவர் தெரிவித்த ஆதரவு;
இந்துக் கண்ணோட்டம் கொண்ட சுந்தர ராமசாமி, கமல் போன்ற பார்ப்பன அறிவாளிகளுக்கு ஒரு இஸ்லாமிய துருப்புச் சீட்டாக தன்னை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து, அதன் மூலம் அவர் அடைந்த இலக்கிய அந்தஸ்து;
அண்ணாதுரை, கலைஞர் போன்ற திராவிட இயக்க எழுத்தாளர்கள் குறித்து ‘நவீன’ எழுத்தாளர்கள் குறிப்பாக ஜெயமோகனும் சாருநிவேதிதாவும் மிக, மிக, மிக இழிவாக (எத்தனை மிக, மிக வேண்டுமானலும் போட்டுக் கொள்ளலாம்.) பேசும்போது அவர் காத்த கள்ள மவுனம்;
இது குறித்தெல்லாம் தவிர்த்து விட்டு நீங்கள் அவரை வாசிப்பதை தவிர்த்துவிடுங்கள்.  mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: