திங்கள், 17 பிப்ரவரி, 2014

யுவனின் மூன்றாவது மனைவி? சினிமாக்காரர்கள் மதம் மாறுவது பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது.

கோலாலம்பூர், மலேசியாவில் கடந்த 01-01-2014 அன்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட காட்சிகள்…

யுவன்  தாடி வளாக்கிறார். யுவன்   அருகில்  சிகப்பு  நிறத்தில்  துப்பட்டா  அணிந்திருக்கும்  பெண்தான்  யுவனின்  மூன்றாவது மனைவியா?  (அல்லாஹ் வெறும் சாந்தத்தையும், அமைதியையும் மட்டும் கொடுக்கவில்லையாம். யுவனின் விரல் பிடித்து நடக்க ஒரு அழகான யுவதியையும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள்)

இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா?
17-02-2013




முதல் திருமணம் சுஜய சந்திரன் 2005 

முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மமேலாக னைவியை வைத்துக் கொள்ள சினிமாக்காரர்கள் பயன் படுத்தி வருகிறார்கள்: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை.
அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது.
அதிலும் முஸ்லிமாக மாறி  ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர்.
இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு  மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல  மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்.

முதல் திருமணம் சுஜயா சந்திரன் 2005.


சாதீய  திரிபுவாதம் கொடுக்கப்பட வேண்டிய அவசியம்:
உண்மை அவ்வாறாக  இருக்கும் போது, சில தமிழ்   ஊடகங்கள், வேறுமுறையில்   திரிபுவாதம் கொடுத்துள்ளது  கவனத்தை  ஈர்த்துள்ளது. வழக்கம் போல  “தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட  தலித் சமூகத்திலிருந்து  இசைத் துறைக்கு வந்து மில்லியன்கள் புரளும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானவர் இளையராஜா.
இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா ஆதிக்க சாதியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்”, என்று ஆரம்பித்து, யுவன் சங்கர் ராஜாவின் பிரச்சினைக் குறிப்பிட்டு, “புதிய மதத்திலும் சாதி ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர்.
இந்துத்துவாவின் வேர்கள் அனைத்து மதங்களிலும் படர்ந்துள்ளன”, என்று முடித்துள்ளது. “இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட இளையராஜா” எனும்போது, ரஹ்மான் கூட அவ்வ்வாறு  இஸ்லாத்திற்கு  முக்கியத்துவம் அளித்து வரும் போது, அவரை அவ்வாறு குறிப்பிடுவதில்லையே, அது ஏன் என்று தெரியவில்லை. அதனால், இதன் நோக்கத்தையும், பின்னணியையும் ஆராய வேண்டியுள்ளது.

இரண்டாவது திருமணம் திருப்பதியில் 2011
வந்துள்ள செய்தி, வதந்தி, விளக்கம்: இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக  தகவல்கள் வெளியாயின. மேலும் யுவன் 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் பரவின. இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள யுவன் சங்கர் ராஜா தான் இஸ்லாத்தை பின்பற்றுவதாகவும், அதற்காக பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்[..
மேலும் மூன்றாவதாக யாரையும் திருமணம் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள அவர். குடும்பத்தினர்  அனைவரும் தனது முடிவை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்[6]. சினிமா இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, முஸ்லிம் மதத்துக்கு மாறினார். அவர் இப்போது தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறார், என்று சுருக்கமாக செய்திகளைக் கொடுத்துள்ளனர்.

இரண்டாவது திருமணம் 2011
இளையராஜாவின் மகன் யுவன்சங்கர்ராஜா: பிரபல சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற 2 மகன்களும், பவதாரிணி என்ற மகளும் இருக்கிறார்கள். மூன்று பேருமே சினிமா படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள். குடும்பமே சேர்ந்து ஒரு தொழிலை செய்வது, வியாபாரம் செய்வது என்பதெல்லாம் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இளையராஜா ஆன்மீகம், பக்தி என்று ஊறித்திளைக்கும் நேரத்தில் தன் மகன் இப்படி மாறுகிறார் என்றால் அது ஆன்மீக தேடலும் இல்லை, பக்தியும் இல்லை ஆனால், அதற்கு மேலாக வேறொன்றுள்ளது என்று தெரிகிறது. ilakkiyainfo.com/

கருத்துகள் இல்லை: