வாஷிங்டன் : நிலையான தொலைபேசி பயன்படுத்தப்பட்ட காலத்தை விட, பேஜர், மொபைல்
போன் என அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்கள்,
உள்ளங்கையில் உலகத்தை சுருங்கச்செய்தது. அதிலும் மொபைல் போன்களில்
இன்டர்நெட் பயன்பாடு வந்த பிறகும், 3ஜி மொபைல்கள் வரத்தொடங்கிய பிறகும்
தகவல் தொடர்பு அசுர வளர்ச்சி பெற்றது. இதையடுத்து வந்த ஸ்மார்ட் போன்களில்
பிரதான அப்களாக இடம்பெற்றவை வாட்ஸ் அப், பேஸ்புக்தான். இதைப்போன்றே வி சாட்
போன் அப்கள் அறிமுகமானாலும் அவை இந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை.இந்த
நிலையில்தான், பேஸ் புக் நிறுவனம் வாட்ஸ்&அப் நிறுவனத்தை விலைக்கு
வாங்கிய தகவல் பேஸ் புக் நிறுவனர் மார்க் ஜூகர்பர்க்கால்
அறிவிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேஸ்&புக்,
வாட்ஸ்&அப் பயன்படுத்துவோர் பரிமாறிக்கொண்ட, லைக் போட்ட அன்றைய ‘ஹாட்
டாபிக்’ அதுவாகத்தான் இருந்தது. வாங்கியதும் அடிமா ட்டு விலைக்கு அல்ல...
19 பில்லியனுக்கு!. அதாவது 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி!.
இதைகேட்டதும் மலைத்துப்போன பொருளியல் நிபுணர்கள் பலர் ‘பேஸ் புக் கொடுத்த தொகை ரொம்பவும் அதிகம். இவ்வளவு கொட்டிக்கொடுக்கிற அளவுக்கு வாட்&அப் ஒன்றும் உச்சாணி கொம்பில் இல்லை’ என்று கமென்ட் அடித்தார்கள்.
ஏனெனில், இதற்கு முன்பு ஒரு நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் இவ்வளவு பெரிய்ய தொகை கொடுத்து வாங்கியதாக வரலாறு இல்லை. இதனால்தான் பேஸ்புக் பங்குகள் காலை 3.4 சதவீதம் சரிந்தது. பின்னர் வர்த்தக முடிவில் இழப்பில் இருந்து மீண்டது.எது எப்படி இருந்தாலும், வாட்ஸ்&அப் முதலீட்டாளர்களுக்கு குஷி கொஞ்சநஞ்சமல்ல. 50 மடங்கு லாபம் கிடைத்தால் சும்மாவா? அதனால்தான், இந்த 2009ல் அமெரிக்கர்கள் ஜான்கோம், பிரையான் ஆக்டன் துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் பணி புரியும் மொத்தமுள்ள 50 ஊழியர்கள் இதன் பங்குதாரர்கள். இவர்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகி விட்டார்கள். ஜான்கோம், பிரையான் ஆக்டன் இருவரும் ஒருகாலத்தில் பேஸ்புக் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக