'ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கினால், கூட்டணிக்கு வர மாட்டோம்;
தனித்து நின்று ஆறு தொகுதிகளில், எங்களால் வெற்றி பெற முடியும்; நீங்கள்
அதிக முக்கியத்துவம் கொடுக்கும், தே.மு.தி.க.,வால், ஒரு தொகுதியில் கூட
வெற்றி பெற முடியாது' என, பா.ம.க., நிறுவனர், ராமதாசின் மகனும், முன்னாள்
மத்திய அமைச்சருமான, அன்புமணி, பா.ஜ., தலைவர்களிடம் சவால் விட்டுள்ளார்.
அன்புமணியின் இந்த ஆவேசப் பேச்சால், பா.ஜ., கூட்டணியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பா.ம.க.,வின் இந்த கோபத்துக்கு, தே.மு.தி.க.,வுடன் நடந்த பேச்சுவார்த்தையும், அக்கட்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதுமே காரணம் என, கூறப்படுகிறது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இப்போது பா.ஜ.,வுடன் கூட்டு சேரும் முடிவில் இருக்கிறார். இதையடுத்து, பா.ஜ., தலைவர்களுடன், அவர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்த விஷயம் தெரிந்ததும், பா.ம.க., தலைமை கடும் அதிருப்தி அடைந்துள்ளது. பா.ம.க., தரப்பில் இருந்து தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டும், பா.ஜ., தலைவர்கள், தே.மு.தி.க., முடிவுக்காக காத்திருந்தனர். இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன், தமிழ்நாட்டுல தொகுதி எண்ணிகையை அதிகரிக்க வேண்டும் என்று.
அவர்கள் எதிர்பார்த்தபடி, தே.மு.தி.க., வந்துள்ளது. அதனால், உற்சாகமான பா.ஜ., வட்டாரம், முதலில், தே.மு.தி.க.,வின் தொகுதி கணக்கை முடிவு செய்து விடலாம் என, பேச்சுவார்த்தையில் தீவிரமாக இறங்கி விட்டது. இதனால், காத்திருந்த, பா.ம.க., கடுப்பை காட்டத் துவங்கி விட்டதாக தெரிகிறது.
இதுபற்றி, பா.ம.க., வட்டாரம் மேலும் கூறியதாவது: பா.ஜ., கூட்டணியில் சேர்வதற்கு, பா.ம.க., முன்வந்ததும், பா.ஜ., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டதோடு சரி. அதன்பின், பா.ம.க., முன்வைத்த விஷயங்கள் பற்றி, எந்த தகவலும் தரப்படவில்லை. ஏற்கனவே, நாங்கள், 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். சில சமுதாய அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்துள்ளோம். அதுவே, வலிமையான அணி தான். இருந்தும், எங்களுக்கு, எந்த முக்கியத்துவமும் தரப்படுவதில்லை. விஜயகாந்துக்காக எங்களை காத்திருப்பு பட்டியலில் வைத்து விட்டனர். இப்போது, அவர் கூடுதல் தொகுதிகள் கேட்பதால், எங்களுக்கு, எட்டு தொகுதிகள் தான் என்கின்றனர். நாங்கள், 12 தொகுதிகள் கேட்டிருந்தோம். 10 எங்களுக்கு, 2 எங்களுடன் உள்ள சமுதாய அமைப்புகளுக்கு என, தெளிவாக கூறியிருக்கிறோம். அப்படியிருக்கும்போது, ஒற்றை இலக்கத் தொகுதிகளை ஒதுக்கினால் என்ன நியாயம்? அதுதான் அன்புமணி டென்ஷனுக்கு காரணம். அதை, பா.ஜ., தலைவர்களிடம் அவர் கொட்டித் தீர்த்து விட்டார். 'நாங்கள் வட மாவட்டங்களில் வலுவாக உள்ள இயக்கம். எங்களால், தனித்து நின்று ஆறு தொகுதிகளில் வெற்றி பெற முடியும். தே.மு.தி.க.வால் அது முடியுமா?' என, அன்புமணி கேட்டதில் எந்த தவறும் இல்லை. ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் என்றால், கூட்டணிக்கு பா.ம.க., சம்மதிக்காது. அதில், எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு, பா.ம.க., வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பா.ஜ., வட்டாரத்தில் கேட்டபோது, 'தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதால்தான், பா.ம.க., - ம.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆரம்பத்தில் இருந்தே, பா.ம.க.,வும் தே.மு.தி.க.,வும் பல்வேறு விஷயங்களில் முரண்டு பிடித்து வருகின்றன. சிரமப்பட்டு தே.மு.தி.க.,வுடன் பேசி முடித்தால், இப்போது தொகுதிகளை அதிகம் கேட்டு, பா.ம.க., முரண்டு பிடிக்கிறது. எல்லோரும் கேட்கும் தொகுதி களின் எண்ணிக்கையை கூட்டிப் பார்த்தால், ஐம்பது தொகுதிகளுக்கு மேல் வருகிறது. இதே நிலைமை நீடித்தால், ஆந்திராவில் இருந்து, பத்து தொகுதிகளை கடனாக வாங்கினால் தான் முடியும். கூட்டணி பேசி முடிப்பதற்குள் dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக