பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலை என்ன? என்பது தொடர்ந்து கேள்விக் குறியாகவே இருக்கிறது. தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ், பா.ஜனதா, தி.மு.க. ஆகிய 3 கட்கிளும் போட்டா போட்டி போட்டன. ஒவ்வொரு கட்சியிடமும் ஒவ்வொரு விதமான நிபந்தனைகள் விதித்து பிடி கொடுக்காமல் நழுவி வந்தார்.
இதனால் தமிழக கட்சிகள் அனைத்தும் தே.மு.தி.க.வுடன் பேசுவதை நிறுத்தி விட்டன. இந்த நிலையில் கட்சி எம்.எல்.ஏக்களுடன் விஜயகாந்த் டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக பிரச்சினைகளுக்காக பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து மனு கொடுத்தார்.
பின்னர், விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனரும் இளைஞர் அணி தலைவருமான எல்.கே. சுதீஷ் ஆகியோர் ஓரு ஓட்டலிலும் எம்.எல்.ஏக்கள் மற்றொரு ஓட்டலிலும் தங்கி இருக்கிறார்கள். ராமதாஸ் பாணியில் எல்லோருடனும் பேரம் பேசி மானம் போச்சு
டெல்லியில் ராகுல், சோனியா ஆகியோர் சந்திக்க விஜயகாந்த் திட்டமிட்டார். ஆனால், இருவரும் வெளி மாநிலங்களில் பிரசாரத்துக்கு சென்று விட்டனர்.
இதையடுத்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோருடன் எல்.கே.சுதீஷ் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்று தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் மற்ற தலைவர்கள் காங்கிரஸ் – தே.மு.தி.க. கூட்டணியில் சேர விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால், ஸ்டாலினை சமரசப்படுத்தும் முயற்சி நடக்கிறது. எனவே, கூட்டணி அமைப்பதில் அவசரம் வேண்டாம் என்று கருதுவதால் காங்கிரஸ் தரப்பில் இருந்து எதிர்பார்த்தபடி சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.
இதே போல் பா.ஜனதா தலைவர்களை விஜயகாந்த் சந்திக்க முயற்சித்தார். ஆனால், விஜயகாந்த் எந்த பக்கம் செல்வார் என்பது உறுதியாகாத நிலையில் இப்போதைக்கு உடனடியாக விஜயகாந்தோடு பேச டெல்லி பா.ஜனதா தலைவர்களும் தயங்குகிறார்கள்.
ஒரே நேரத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளோடும் பேசிய விஜயகாந்த் கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.
டெல்லியிலும் எதிர் பார்த்தபடி எந்த பலனும் கிடைக்காததால் விஜயகாந்த் ஏமாற்றம் அடைந்துள்ளார். இன்று விஜயகாந்தும் எம்.எல்.ஏ. குழுவினரும் சென்னை தி maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக