ஈழத் தமிழர் பிரச்சினையில் கலைஞர் துரோகம் செய்தார் என்று அவரை கடுமையாக இப்போதும் விமர்சிக்கிற பெரியார் இயக்கங்கள்;
இன்று வைகோ பா.ஜ.க வோடு கூட்டணி வைத்ததை
கண்டிக்காமல் இருப்பது ஏன்? கலைஞர் பா.ஜ.க வோடு கூட்டணி வைத்திருந்தால்
இப்படித்தான் மவுனம் காப்பார்களா?
ஈழப் பிரச்சினைக்கு கொடுக்கிற
முக்கியத்துவத்தை இந்து மத எதிர்ப்புக்கு கொடுக்காமல் தொடர்ந்து வைகோ
விவகாரத்தில் மவுனம் காத்தால், வரும் காலங்களில் எச். ராஜா இல்ல.. வைகோ வே
பெரியாரை இழிவாதான் பேசுவார்.
பெரியார் இயக்கங்களின் இந்த மவுனம்
தொடர்ந்து நீடிப்பதை பார்த்தால், ‘பா.ஜ.க நிற்கிற இடங்களில் பா.ஜ.க வை
எதிர்ப்பது, ம.தி.மு.க நிற்கிற இடங்களில் ம.தி.மு.க வை ஆதரிப்பது’ என்று
முடிவு செய்து விடுவார்களோ என்று ‘கலக்கமாக’ இருக்கிறது.
அப்படி செய்தால்..?
என்ன சொல்றது.. இயக்குநர் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் இறுதிக் காட்சியில் நடிகர் விஜயன் தன் வாழ்க்கையின் கடைசி நேரத்தில் பேசிய வசனம்தான் நினைவுக்கு வருகிறது:
என்ன சொல்றது.. இயக்குநர் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் இறுதிக் காட்சியில் நடிகர் விஜயன் தன் வாழ்க்கையின் கடைசி நேரத்தில் பேசிய வசனம்தான் நினைவுக்கு வருகிறது:
“நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க… ஆனா இன்னிக்கி உங்க எல்லாரையும் நான் என்னப் போல மாத்திட்டேன்”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக