செவ்வாய், 7 ஜனவரி, 2014

சரத் பவார்: காங்., உடன் கூட்டணி கிடையாது ! உங்க கொள்கையை கண்டு நான் வியக்கிறேன் .....

மும்பை : ''காங்கிரசுடன், மகாராஷ்டிராவில் மட்டுமே கூட்டணி அமைப்போம். மற்ற மாநிலங்களில், தனியாகவே தேர்தலை சந்திப்போம்,'' என, தேசியவாத காங்., தலைவரும், மத்திய விவசாய அமைச்சருமான, சரத் பவார் கூறியுள்ளார்.மகாராஷ்டிராவில், காங்., - தேசியவாத காங்., கூட்டணி, பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இங்கு, இந்த கூட்டணி தான், தற்போது ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், தேசியவாத காங்., தலைவரும், மத்திய விவசாயத் துறை அமைச்சருமான, சரத் பவார் கூறியதாவது:கடந்த லோக்சபா தேர்தலில், மகாராஷ்டிராவில், எங்கள் கட்சி, 22 தொகுதிகளிலும், காங்கிரஸ், 26 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்தாண்டில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், தொகுதி பங்கீடு குறித்து, இன்னும் பேச்சுவார்த்தை துவங்கவில்லை. ஆனால், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் போட்டியிடுவோம். ஏற்கனவே வைத்துள்ள எந்த தொகுதியையும், காங்கிரசுக்கு விட்டுத் தர மாட்டோம்.மகாராஷ்டிராவை தவிர, குஜராத், கோவா, மத்திய பிரதேசம், உ.பி., ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களில், காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை. தனியாகவே, தேர்தலை சந்திப்போம். கேரளாவில், இடதுசாரி கட்சி கூட்டணியில், எங்கள் கட்சி அங்கம் வகிக்கும்.இவ்வாறு, சரத் பவார் கூறினார்.

கருத்துகள் இல்லை: