சனி, 11 ஜனவரி, 2014

பிச்சை எடுப்பதற்காக சூடுபோட்டு 2 சிறுவர்கள் சித்ரவதை? தொண்டு நிறுவனத்தினர் மீட்பு

தஞ்சாவூர், பிச்சை எடுப்பதற்காக சூடு போட்டு 2 சிறுவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதாக கூறினர். இதையடுத்து அவர்களை தொண்டு நிறுவனத்தினர் மீட்டு குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைத்தனர்.
2 சிறுவர்கள்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு 2 சிறுவர்கள் வந்தனர். அவர்கள் நாகையை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த சுரேஷ் (வயது12), ரமேஷ் (10) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) என தெரிவித்தனர். நாங்கள் படிப்பை பாதியில் விட்டு விட்டோம். நாங்கள் படிக்க விரும்புவதால் வீட்டை விட்டு பட்டுக்கோட்டைக்கு வந்து விட்டோம். நாங்கள் 2 பேரும் அண்ணன்– தம்பி என தெரிவித்தனர்.

அதன் பேரில் பட்டுக்கோட்டை சப்–இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், உதயசூரியன் ஆகியோர் தஞ்சை சைல்டு லைன் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சைல்டுலைன் தொண்டு நிறுவன இயக்குனர் பாத்திமாராஜ், உறுப்பினர் இளமதி ஆகியோர் அங்கு சென்று 2 சிறுவர்களையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
சூடு போட்டு சித்ரவதை
சிறுவர்களிடம் விசாரணை நடத்திய போது தங்கள் பெற்றோர் இறந்து விட்டதாகவும், தங்களை ஒரு பெண் சூடு போட்டு பிச்சை எடுக்க வைத்தார். நாங்கள் வேளாங்கண்ணி பஸ் நிலையத்திலேயே இரவு தங்குவோம். தினமும் ரூ.100–க்கு குறையாமல் பிச்சை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இது குறித்து நாகை ஆறுகாட்டுத்துறையில் சிறுவர்கள் தெரிவித்த முகவரியில் விசாரித்த போது சிறுவர்களின் தாய் உயிரோடு இருப்பது தெரிய வந்தது. சிறுவர்கள் 2 பேரும் ஏற்கனவே இது போல் திருநெல்வேலிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளனர். ஆனால் சூடு போட்டு சித்ரவதை செய்தது யார்? என்பது குறித்து தெரிய வில்லை. அவர்கள் கையில் காயமும் உள்ளது. சிறுவர்கள் கூறுவது உண்மை தானா? எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து அங்குள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைப்பு
இதையடுத்து தொண்டு நிறுவனத்தினர் 2 சிறுவர்களையும் தஞ்சையில் உள்ள குழந்தைகள் நலக்குழுமத்திடம் ஒப்படைத்தனர். மேலும் நேற்று முன்தினம் நள்ளிரவு ரெயில் நிலையத்தில் மீட்கப்பட்ட ஆடுதுறையை சேர்ந்த சிறுவன் கோகுலும் குழந்தைகள் நலக்குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டான்.dailythanthi.com

கருத்துகள் இல்லை: