வியாழன், 9 ஜனவரி, 2014

சென்னை IIT வளாகத்தில் ஒரே நாளில்வாகனங்கள் மோதி 4 மான்கள் பலி:சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எங்கே போய்விட்டார்கள்


சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் நான்கு மான்களின் சடலம் மீட்கப் பட்டுள்ளது. வாகனங்கள் மோதி பலியானதாகவும், நாய்கள் கடித்துப் பலியானதாகவும் இருவேறுக் கருத்துக்கள் நிலவுவதால் மான்களின் மரணத்தில் குழப்பம் நீடிக்கிறது. சென்னை ஐஐடி அமைந்துள்ளப் பகுதியில் வனப் பகுதியின் அளவு குறைந்து வருவதாலும், வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதாலும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக விபத்துக்களில் சிக்கி மான்கள் உள்ளிட்டவை பலியாவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சென்னை ஐஐடி வளாகத்தில் நான்கு இறந்த மான்களின் சடலங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது. உயிரிழந்த மான்கள் வண்டிகளில் அடிபட்டு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. வனப்பகுதியின் எல்லை சுருங்கி, போக்குவரத்து அதிகரித்து வருவதே இதுபோன்ற விபத்துக்களுக்குக் காரணம் என ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், நாய்கள் கடித்ததாலேயே மான்கள் பலியாகியுள்ளதாக வன அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஐஐடி வளாகத்தில் போக்குவரத்து ஒழுங்கு படுத்தப் பட்டு வாகனங்களின் வேகம் கண்காணிக்கப் பட்டு வருவதாகவும், எனவே வாகனங்களில் அடிபட்டு மான்கள் இறந்திருக்க வாய்ப்பில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அதனைக் கட்டுப் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டால் தான் எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்களில் இருந்து விலங்குகளைக் காப்பாற்ற முடியும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: