சனி, 11 ஜனவரி, 2014

அமெரிக்காவில் சக மாணவிக்கு முத்தமிட்ட 6 வயது பள்ளி மாணவன் சஸ்பெண்டு

Kiss on the hand was deemed a violation of the Colorado school's no unwanted touching policy.
கொலராடோ, ஜன. 13-
அமெரிக்கா நாட்டில் 6 வயது நிறைந்த பள்ளி மாணவன் தனது சக மாணவியை முத்தமிட்டதால் பள்ளியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.அமெரிக்காவின் கொலராடோ நகரில் கேனன் என்ற பகுதியில் அமைந்த பள்ளி கூடம் ஒன்றில் படித்து வரும் சிறுவன் ஹன்டர் யெல்டன் (வயது 6).  இவன் சம்பவம் குறித்து தொலைக்காட்சிக்கு அளித்த தகவலின்படி, தன்னுடன் படிக்கும் சக மாணவியுடன் சேர்ந்து ஒன்றாக பாடம் படித்து கொண்டிருந்து உள்ளான். அப்பொழுது, மெதுவாக குனிந்து அவளது கையில் முத்தமிட்டு உள்ளான்.இது தான் நடந்தது என்று அவன் தெரிவித்துள்ளான்.  சக மாணவியின் மீது தான் அன்பு கொண்டிருந்ததாகவும், அந்த மாணவியும் பதிலுக்கு தன் மீது அன்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ள அந்த மாணவன் தற்போது பள்ளி நிர்வாகத்தின் தண்டனைக்கு உள்ளானதால் வருத்தத்துடன் உள்ளான்.
அவன் தற்போது, அவனது தாய் சாண்டர்சிடம் செக்ஸ் என்றால் என்ன? என்று கேள்வி கேட்கிறான்.  இது 6 வயது நிறைந்த சிறுவனுக்கு அதிகப்படியான தண்டனை ஆகும் என சாண்டர்ஸ் கூறியுள்ளார்.  எனினும், மாவட்ட கல்வி அதிகாரி ராபின் கூல்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, விரும்பத்தகாத வகையில் தொடுவதற்கு எதிரான கொள்கை அடிப்படையில் மாணவன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளான் என தெரிவித்துள்ளார். அவனது நடத்தையையே நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம்.  வழக்கமாக மாணவன் தனது செய்கையை நிறுத்தவே நாங்கள் முயற்சி செய்வோம்.  ஆனால் அது தொடர்ந்து நடந்தால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளோம்.   அது சில நேரங்களில் சஸ்பெண்டு என்ற நிலைக்கும் சென்று விடுகிறது என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார். .maalaimalar.com

கருத்துகள் இல்லை: