திங்கள், 6 ஜனவரி, 2014

சிதம்பரம் தீர்ப்பு ! தீட்சிதர்கள் கொண்டாட்டம்! தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று தீட்சிதர்கள் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலை தமிழகஅரசு நிர்வகித்து வருகிறது. இதற்கு எதிராக தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் தீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் போனது சிதம்பரம் நடராஜர் கோயில். தீர்ப்பு எதிரொலி- சிதம்பரம் தீட்சிதர்கள் கொண்டாட்டம்! தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!! இத்தீர்ப்பு வெளியானதையடுத்து சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் காசிராஜன் தலைமையில் கோயிலுக்குள் வெடி, வெடித்து பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதேபோன்று இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரும் கீழசன்னதியில் வெடி, வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். தீர்ப்பைக் கண்டித்து போராட்டம் அதே நேரத்தில் இத் தீர்ப்பை எதிர்த்து தீர்ப்பை சிதம்பரம் மேலவீதி பெரியார்சிலை அருகே மனித உரிமை பாதுகாப்பு மையம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணியினர் வழக்கறிஞர் செந்தில் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 58 பேரை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்த சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: