புதன், 8 ஜனவரி, 2014

தமிழ்த் திரைப்பட விருதுகள் – 2013 சிறப்பான படங்களும் சுவாரஸ்யமான முயற்சிகளும் நடந்தேறிய ஆண்டு

சி.சரவணகார்த்திகேயன் 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகவும் செழிப்பான ஆண்டு. குறிப்பிட்டுச் சொல்லும் எண்ணிக்கையில் சிறப்பான படங்களும் சுவாரஸ்யமான முயற்சிகளும் நடந்தேறி இருக்கின்றன. வரும் ஆண்டுகளில் இது தொடரவும் அதிகரிக்கவும் வேண்டும். ஓர் எளிய‌ ரசிகனாய் அதை அங்கீகரிக்கும் முறையில் தொடர்ந்து 12வது ஆண்டாக இவ்வருடமும் எனது விரிவான‌ திரைப்பட விருதுப் பட்டியலை வெளியிடுகிறேன். தமிழ் பேப்பரில் இவை வெளியாவது இது மூன்றாவது முறை.
பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட படங்கள்
* தங்க மீன்கள் * ஓநாயும் ஆட்டுக்குட்டியும் * பரதேசி * விஸ்வரூபம் * சூது கவ்வும் * மதயானைக் கூட்டம் * உதயம் NH4 * சிங்கம் 2 * பாண்டிய நாடு * மூடர்கூடம் * ஹரிதாஸ் * கௌரவம் * இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா * கல்யாண சமையல் சாதம் * ஐந்து ஐந்து ஐந்து * இவன் வேற மாதிரி * வருத்தப்படாத வாலிபர் சங்கம் * பிரியாணி * வத்திக்குச்சி * கடல் * விடியும் முன் * 6 * இரண்டாம் உலகம் * ஆரம்பம் * என்றென்றும் புன்னகை * ராஜா ராணி *
தில்லுமுல்லு * தீயா வேலை செய்யனும் குமாரு * அமீரின் ஆதி பகவன் * ஆதலினால் காதல் செய்வீர் * தேசிங்கு ராஜா * மரியான் * டேவிட் * ஆல் இன் ஆல் அழகுராஜா * சேட்டை * நய்யாண்டி * கேடி பில்லா கில்லாடி ரங்கா * தலைவா * சென்னை எக்ஸ்ப்ரஸ் * அலெக்ஸ் பாண்டியன் * அம்பிகாபதி * எதிர்நீச்சல் * கண்ணா லட்டு தின்ன ஆசையா * நேரம் * சென்னையில் ஒரு நாள் * சமர் * அன்னக்கொடி * (மொத்தம் 47)
0
விருதுகள்
  1. சிறந்த திரைப்படம் – தங்க மீன்கள்
  1. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – சூது கவ்வும்
  1. சிறந்த இயக்குநர் – பாலா (பரதேசி)
  1. சிறந்த திரைக்கதை – மிஷ்கின் (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)
  1. சிறந்த வசனம் – நலன் குமாரசாமி (சூது கவ்வும்)
  1. சிறந்த கதை – ராம் (தங்க மீன்கள்)
  1. சிறந்த பின்னணி இசை – இளையராஜா (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)
  1. சிறந்த ஒளிப்பதிவு – செழியன் (பரதேசி)
  1. சிறந்த படத்தொகுப்பு – மகேஷ் நாராயணன் (விஸ்வரூபம்)
  1. சிறந்த கலை இயக்கம் – லால்குடி ந‌. இளையராஜா (விஸ்வரூபம்)
  1. சிறந்த ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி (பரதேசி)
  1. சிறந்த ஒப்பனை – பரதேசி
  1. சிறந்த ஒலிப்பதிவு – குணால் ராஜன் (விஸ்வரூபம்)
  1. சிறந்த VFX – மதுசூதனன் (விஸ்வரூபம்)
  1. சிறந்த சண்டை அமைப்பு – Lee Whittaker (விஸ்வரூபம்)
  1. சிறந்த நடன இயக்கம் – பண்டிட் பிர்ஜு மஹாராஜ் (விஸ்வரூபம்)
  1. சிறந்த பாடல் இசை – யுவன் ஷங்கர் ராஜா (தங்க மீன்கள்)
  1. சிறந்த பாடல் ஆசிரியர் – நா. முத்துக்குமார் (தங்க மீன்கள்)
  1. சிறந்த பின்னணி பாடகர் – ஸ்ரீராம் பார்த்தசாரதி (ஆனந்த யாழை – தங்க மீன்கள்)
  1. சிறந்த பின்னணி பாடகி – சைந்தவி (யாரோ இவன் – உதயம் NH4)
  1. சிறந்த நடிகர் – கமல்ஹாசன் (விஸ்வரூபம்)
  1. சிறந்த நடிகை – பார்வதி மேனன் (மரியான்)
  1. சிறந்த துணை நடிகர் – ஸ்ரீ (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)
  1. சிறந்த துணை நடிகை – சினேகா (ஹரிதாஸ்)
  1. சிறந்த குணச்சித்திர‌ நடிகர் – பாரதிராஜா (பாண்டிய நாடு)
  1. சிறந்த குணச்சித்திர‌ நடிகை – விஜி சந்திரசேகர் (மதயானைக் கூட்டம்)
  1. சிறந்த வில்லன் நடிகர் – ராகுல் போஸ் (விஸ்வரூபம்)
  1. சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம் (என்றென்றும் புன்னகை)
  1. சிறந்த குழந்தை நடிகர் – பேபி சாதனா (தங்க மீன்கள்)
  1. சிறந்த டைட்டில் கார்ட் – தங்க மீன்கள்
  1. சிறந்த ட்ரெய்லர் – பரதேசி
  1. சிறந்த திரைப் புத்தகம் – Conversations with Mani Ratnam (Baradwaj Rangan)
  1. சிற‌ந்த திரை விமர்சகர் – அராத்து (https://www.facebook.com/araathu.officialpage)
 .tamilpaper.net

கருத்துகள் இல்லை: