வெள்ளி, 10 ஜனவரி, 2014

Delhi 7 மணி நேரத்தில் 4,000 ஊழல் புகார் அழைப்பு

புதுடில்லி: 'ஆம் ஆத்மி' துவக்கிய, ஊழல், லஞ் சத்திற்கு எதிரான, 'ஹெல்ப்லைன்' போன் வசதியில், ஏழு மணி நேரத்தில், 4,000 தொலைபேசி அழைப்புகள் வந்து உள்ளன.
டில்லி மாநில அரசில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், ஊழியர்களை கண்டுபிடிக்க, பொதுமக்களுக்கான, அவசர உதவி தொலைபேசி எண்களை, முதல்வர், கெஜ்ரிவால் நேற்று முன்தினம் வெளியிட்டார். காலையில், 8:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை செயல்படும் என்றும், அறிவித்தார். இந்த, 'ஹெல்ப்லைனுக்கு' தொடர்பு கொண்டு, லஞ்சம் வாங்குபவர்கள் குறித்த தகவல் சொன்னால், பாதிக்கப்பட்டவரே, புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, லஞ்சம் கேட்டவரை, ஆதாரத்துடன் சிக்க வைக்க வழி வகுக்கப்படும் என, கெஜ்ரிவால் குறிப்பிட்டு இருந்தார். இதில் 60% எதிர்கட்சிகள் பழிவாங்கும் நோக்கத்தில் பாதி வெற்று புகார்களை பதிவுசெய்து அவர்களின் இந்த செயலை முடக்க அல்லது வெறுப்பேற்ற இதுபோல் செய்யும் . ஏன் என்றால் தற்போது லஞ்சத்துக்கு எதிரான அரசு ஆட்சியில் இருப்பதால் லஞ்சம் வாங்குவோர் கொஞ்சம் யோசித்துக்கொண்டுதான் இருப்பார்கள் . சிறிது நாள் ஆறப்போட்டுத்தான் வாங்குவார்கள் . இதுதான் இயல்பு ....
இந்த அவசர உதவி தொலைபேசி எண்கள், நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தன. இது துவக்கிய, ஏழு மணி நேரத்தில், 4,000 அழைப்பு கள் வந்ததாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து அழைப்புகள் வருவதால், 'ஹெல்ப்லைனில்' பணியாற்றும் ஊழியர்களால், சமாளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதை அறிந்த, முதல்வர் கெஜ்ரிவால், ஊழியர்கள் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த உத்தரவிட்டுள்ளார். வரும் அழைப்புகளில், புகாரில் நியாயம் இருக்கும் பட்சத்தில், அதை, 15 வல்லுனர்கள் அடங்கிய குழுவுக்கு அனுப்பப் படுகிறது. அவர்கள், அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கின்றனர். ஹெல்ப் லைனுக்கு பேசும் அனைவரும், 'ஊழலை கண்டுபிடிக்க,'ஸ்டிங்' ஆபரேஷன் நடத்துக்கள்' என வலியுறுத்தி கூறுகின்றனர். ஹெல்ப்லைன் எண்ணை, பொதுமக்கள் எளிதில் ஞாபகம் வைத்து கொள்ளும் வகையில், நான்கு இலக்க எண்ணாக மாற்றப்படுகிறது.

கருத்துகள் இல்லை: