மூடப்பட்ட அரசாங்க நிறுவனங்களை மீள
ஆரம்பிப்பதற்கான ஒரு நிபந்த
னையாக தன்னால் கைச்சாத்திடப்பட்ட சுகாதார கவனிப்பு சீர்திருத்தத்தை குழிதோண்டிப் புதைக்க தான் அனுமதிக்கப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சூளுரைத்துள்ளார்.
னையாக தன்னால் கைச்சாத்திடப்பட்ட சுகாதார கவனிப்பு சீர்திருத்தத்தை குழிதோண்டிப் புதைக்க தான் அனுமதிக்கப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சூளுரைத்துள்ளார்.
புதிய
வரவு-செலவுத்திட்டமொன்றுக்கு இணக்கம் தெரிவிக்க அமெரிக்கப்
பாராளுமன்றத்தின் இரு சபைகளும் தவறியதையடுத்து அரசாங்க
நிறுவனங்களை பகுதியாக மூடும் நிர்ப்பந்தத்திற்கு அமெரிக்கா
உள்ளானது.பராக் ஒபாமா தனது சுகாதார சட்டத்தை பிற்போடாத வரை புதிய
வரவு-செலவுத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்க முடியாது என
குடியரசுக் கட்சியினர் வலியுறுத்தியிருந்தனர்.
அமெரிக்க அரசாங்க நிறுவனங்கள்
மூடப்படுவதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு குடியரசுக் கட்சியினர்
கப்பம் கோருவதாக பராக் ஒபாமா தெரிவித்தார்.மேற்படி அரசாங்க
நிறுவனங்கள் மூடப்பட்டதால் 700,000க்கு மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள்
சம்பளம் இல்லாத விடுமுறையை எதிர்கொண்டுள்ளனர்.அத்துடன் தேசிய
பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பல அரசாங்கக் கட்டடங்கள்
மூடப்பட்டுள்ளன.
மேற்படி நிறுவனங்கள்
மூடப்பட்டமைக்கு பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் அங்கம் வகிக்கும்
பழைமைவாத குடியரசுக் கட்சியினரே காரணம் என குற்றஞ்சாட்டிய பராக்
ஒபாமா, ”அந்தக் கட்சியின் ஒரு பிரிவினரே இதற்குக் காரணம். ஏனெனில்
அவர்கள் ஒரு சட்டத்தை விரும்பவில்லை” என்று கூறினார்.அவர்கள்
மில்லியன்கணக்கான அமெரிக்கர்களுக்கான சுகாதார காப்புறுதித்
திட்டத்தை மறுப்பதற்கான தமது போராட்டத்தில் அமெரிக்க அரசாங்கத்தை
மூடும் நிலைக்கு தள்ளியுள்ளனர்” என அவர் தெரிவித்தார்.
வரவு-செலவு திட்டத்தை நிறைவேற்றி
அரசாங்க நிறுவனங்களின் மூடப்பட்ட நிலையை முடிவுக்கு கொண்டு வந்து
பொருளாதார ஸ்தம்பித நிலையை தடுக்குமாறு பராக் ஒபாமா பாராளுமன்றத்தை
வலியுறுத்தியுள்ளார்.அத்துடன் அரசாங்கத்திற்கு பகுதியாக நிதி
அளிக்கும் எந்தவொரு சட்டமூலத்திற்கு எதிராகவும் மறுப்பாணை அதிகாரம்
பிரயோகிக்கப்படவுள்ளதாக ஒபாமாவின் பேச்சாளர் அமி புருன்டேஜ்
தெரிவித்துள்ளார்.இத்தகைய பகுதியாக நிதியளிக்கும் திட்டங்கள்
அரசாங்கத்தை செயற்படுத்த வழிவகை செய்யாது என அவர் கூறினார்.
பராக் ஒபாமா அரசாங்க நிறுவனங்கள்
மூடப்பட்ட காலப் பகுதியில் இராணுவத்திற்கு ஊதியம் வழங்குவதை
உறுதிப்படுத்தும் சட்டமூலம் ஒன்றில் ஏற்கனவே கைச்சாத்திட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.அமெரிக்க அரசாங்க நிறுவனங்களை மூடும்
பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக பராக் ஒபாமா மலேசியாவுக்கு
தன்னால் மேற்கொள்ளப்படவிருந்த சுற்றுலாவொன்றை இரத்துச்
செய்துள்ளார்.
அவருக்குப் பதிலாக அமெரிக்க
இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் வாரம் 11 ஆம் திகதி
மலேசியாவில் நடைபெறும் மேற்படி வர்த்தகக் கூட்டத்தில் கலந்து
கொள்ளவுள்ளதாக மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக்கின் அலுவலகம்
தெரிவித்துள்ளது.ஒபாமா எதிர்வரும் சனிக்கிழமை பொருளாதார உறவுகளை
ஊக்குவிக்கும் முகமாக மேற்கொள்ளவிருந்த 4 ஆசிய நாடுகளுக்கான
விஜயத்தில் இந்த மலேசிய விஜயமும் உள்ளடங்குகிறது.
அந்த விஜயம் 1966 ஆம் ஆண்டிற்கு பின்
அமெரிக்க ஜனாதிபதி ஒருவரால் மலேசியாவுக்கு மேற்கொள்ளப்படும்
முதல் விஜயமாக அமையவிருந்தது.அவர் இதன்போது இந்தோனேசியா, புரூணை
மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் விஜயத்தை
மேற்கொள்ளவிருந்தார்.பராக் ஒபாமா ஆசிய சுற்றுப் பயணங்களை இரத்துச்
செய்வது கடந்த 3 வருட காலப் பகுதியில் இது மூன்றாவது தடவையாகும்.
2010 ஆம் ஆண்டில் சுகாதார கவனிப்பு
தொடர்பான வாக்கெடுப்பு, மெக்ஸிக்கோ வளைகுடாவில் எண்ணெய் சிந்தியமை
என்பவற்றால் தனது ஆசிய பிராந்திய பயணங்களை அவர் இரத்துச்
செய்திருந்தார்.அரசாங்க நிறுவனங்களை மூடும் நடவடிக்கையால் விசா
மற்றும் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்
பரிசீலனைக்குட்படுத்தப்படாத நிலை தோன்றியுள்ளது.இந்நிலையில்
அமெரிக்க குடியரசுக் கட்சியினருக்கு மேலும் பேச்சுவார் த்தைகளை
நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. engaltheasam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக