திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு
கானாவில் உள்ள பெரியார் ஆப்பிரிக்க நிறுவன குழுவினருடன் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்.
கானா, செப். 28- ஆப்பிரிக்காவின் கானாவில்
பெரியார் ஆப்பிரிக்க (PAF) பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார்
135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.
அன்புராஜ் பங்கேற் றார். அங்கு பல்வேறு புதிய திட்டங்களும், ஒப்பந்தங்களும்
மேற்கொள்ளப்பட்டன.
மாபெரும் சமுதாயச் சீர்திருத்தவாதியான
பெரியாரின் முற்போக்குச் சிந்தனை ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் பரப்பிட
பெரியார் ஆப்பிரிக்க நிறுவனம் ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டில் 2012
செப்டம்பர் 16-ஆம் தேதி, கானா தலைநகர் அக்ராவில் துவக்கப்பட்டது. அதன்
முதலாம் ஆண்டு நிறைவு விழா அக்ராவில் செப்டம்பர் 26இல் நடைபெற்றது.
தேசிய கீதத்துடன் தொடங்கிய
இந்நிகழ்ச்சிக்கு பெரியார் ஆப்பிரிக்க நிறுவனத்தின் தலைவர் கே.சி.
எழிலரசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பெரியார் ஆப்பிரிக்க நிறுவனத்தின்
செயலாளர் சாலை மாணிக்கம் பவர்பாய்ன்ட் உதவியுடன் நிறுவனத்தைப் பற்றி
விளக்கினார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக குழு
உறுப்பினர் வீ. அன்புராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று
உரையாற்றினார். கானாவின் நிலங்கள் மற்றும் இயற்கை வள அமைச்சர்
மாண்புமிகு இனுஷாப் பியூசெய்னி, OSUவின் மிக முக்கிய அதிகாரி டி.எஃப்
நிலோக் வெயிக்கிங்காத வோளூ, கானாவிற்கான இந்திய தூதர் அக்னீஷ்குமார்,
வளர்ச்சிப் பாட பல்கலைக் கழகப் பதிவாளர் ஆடம் தங்கோ சாக்காரியா, பெரியார்
ஆப்பிரிக்க மய்ய ஆலோசகர் பெண்டம் வில்லியம்ஸ், பெரியார் ஆப்பிரிக்க
மய்யத்தின் ஆலோசகர் பக்காரி சாதிக்நயாரி ஆகியோர் பாராட் டுரை வழங்கினர்.
பெரியார் ஆப்பிரிக்க நிறுவனத் தின் புரவலர், எஸ்.எஸ். பட்டல் அவர்கள்
நன்றியுரையாற்றினார்.
நிறுவனத்தின் நோக்கம்
பெரியாரின் கொள்கைகளான, மனித நேயம்
மற்றும் சுயமரியாதையை சமூகத்திலும், பொரு ளியல் நிலையிலும் மேம்படுத்துதலே
பெரியார் ஆப்பிரிக்க நிறுவனத்தின் நோக்கமாகும்.
பெரியார் ஆப்பிரிக்க நிறுவனம் ஒரு வியாபார
நோக்கமில்லாத அரசு சாரா தொண்டு நிறுவன மாகும். தொழில் நுட்பங்களைப்
பல்வேறு சமூகநல அமைப்புகளிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் பெற்று அவற்றை
கிராமப்புற மக்களுக்குக் கொண்டு செல்வதும், நகர்ப்புற மக்களுக்கும்,
கிராமப்புற மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்புவதும் தான் பெரி யார்
நிறுவனத்தின் நோக் கம். மக்களை வலுவுள் ளவர்களாக்க நாம் நமது கைகளை
இணைத்துக் கொள்வோம், அவர்களை சுதந்திரம் பெற்றவர் களாக்கி வெற்றி பெறு
வதற்கு முன்னெடுத்துச் செல்வதற்கு உதவுவோம் என்பது பெரியார் ஆப் பிரிக்க
நிறுவனத்தின் நோக்கம்.
பெரியார் ஆப்பிரிக்க நிறுவனத்தின் பணிகள்
1) வளர்ந்து வரும் கல்வித்துறைக்காக
கானாவில் தாமனேயில் உள்ள பல்கலைக்கழகமும், தமிழ்நாட்டில் தஞ் சையில் உள்ள
பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து
கொண்டுள்ளன. அதன் மூலம் கல்வி ஆசிரியர்களும், மாணவர்களும் பரிமாற்றம்
செய்து கொள்ளப்படு வார்கள். தொழில் நுட்ப உடன்பாடுகள் முதலியன ஏற்படும்.
இது பல்துறைகளில் இந்தியாவில் கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கு
உதவுவதுடன் புதிய தொழில்நுட்பங்கள் கானாவில் உள்ள கல்வி அமைப்பிற்குச்
சேரும்.
2) கானாவில் உள்ள இந்திய தூதரகத்தின் இணை
தூதரக அதிகாரி அக்னீஷ் குமார், இந்திய தூதரகத்தினால் அளிக்கப்படும்
மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகள் நகர்ப்புற வளர்ச்சித் திட்ட
மாணவர்களுக்கும் அளிக்கப்படும் என்றார்.
3) பெரியார் ஆப்பிரிக்க நிறுவனத்தின்
உறுப்பினரான டாக்டர் பக்தவத்சலம், நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ்
நியமிக்கப்பட்டார். 2014-ஆம் ஆண்டின் புதிய தொழில் நுட்பம் பற்றிய
படங்கள் தயாராகி விடும் புதுப்பிப்பதற்கான சக்தி பற்றிய பாடங்கள்
தயாராகிவிடும். கானா நாட்டின் மின்னியல் தொழில் நுட்ப கல்வி
பயில்வோருக்காக உதவியாக இருக்கும். இதன் மூலம் கானாவின் பொரு ளாதார
வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். 4. அன்னாசிப் பழ விவசாயிகளுக்கு
பெரியார் ஆப்பிரிக்க நிறுவனம் வட்டியில்லாத கடன் கொடுத்து உதவியிருக்கிறது.
பெரியார் ஆப்பிரிக்க நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள்
இனி வருங்காலங்களில் மேலும் பல திட்டங்கள் பெரியார் ஆப்பிரிக்க நிறுவனம் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அவையாவன.
1. பெரியார் ஆப்பிரிக்க நிறுவனம், பஞ்சாப்
வேளாண்மைப் பல்கலைக் கழகத்துடன், அவர் களது விரிவாக்க மய்யங்கள் தெற்கு
கானாவில் ஒன்றும் வடக்கு கானாவில் ஒன்றுமாக, நகர்ப்புற வளர்ச்சித்
திட்டங்களின் கீழ் அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
2. இதற்காக பெரியார் ஆப்பிரிக்க நிறுவனம்
சில அறிவியலாளர்களைப் பஞ்சாபிற்கு அனுப்பி அதற்கான வழி முறைகளை ஆய்ந்து,
செயல்படுத்து வதற்கு ஆவன செய்யும்.
மருத்துவ முகாம்கள்
மருத்துவ முகாம்கள்
3. ஒதுக்குப்புறமாயுள்ள கிராமப்
பகுதிகளுக்கு, பல்கலைக் கழகங்கள் உள்ளூர் மருத்துவமனைகள் மற்றும் அரசு சாரா
நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ முகாம்கள் அமைத்தல்.
4.பெரியார் ஆப்பிரிக்க மய்யம்
உழவர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் மூலமாக சிறந்த தொழில் நுட்பங்கள், அதன்
மூலம் சிறந்த உழவர்கள் உருவாக்கப்படுவதுடன் முடிவாக அவர்கள் வாழ்க்கைத்
தரத்தில் முன்னேற்றம் உண்டாக்குதல்.
5. மழைநீர் பயன்பாடு பற்றிய பயிற்சிகள் கொடுத்து, அதிகமாகப் பெய்யும் மழை நீரை மழைக் காலங்களில் நன்கு சேமித்து, ஆண்டு முழுவதும் பய னுள்ள முறையில் உபயோகப்படுத்திக் கொள்ளல்.
5. மழைநீர் பயன்பாடு பற்றிய பயிற்சிகள் கொடுத்து, அதிகமாகப் பெய்யும் மழை நீரை மழைக் காலங்களில் நன்கு சேமித்து, ஆண்டு முழுவதும் பய னுள்ள முறையில் உபயோகப்படுத்திக் கொள்ளல்.
6. கிராமப்புற பகுதிகளில் ஆழ் துளைக்கிணறு
கள் மூலம் குடிநீர் பெறச் செய்தல். இது போன்ற திட்டங்களை செயல்படுத்தத்
திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றோர் பற்றி..
உயர்திரு கே.சி. எழிலரசன்: இந்தியாவில்
உள்ள பிரபலமான அரசியல் மற்றும் சமுதாய அமைப்புகளின் பிரபலமானவர் பல
சமுதாயத் தொண்டுகளிலும் அரசு சாராப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டவர்.
பன்னாட்டு சுழற் கழகத்தின் ஒரு முக்கிய கொடையாளி. உயர்திரு சாலை மாணிக்கம்:
உலகத்தின் பல பாகங்களிலும் உள்ள அரசு சாரா அமைப்புகளின் ஆலோசகராக
விளங்கும் பெண்மணி. இந்தியாவி லும் பல அரசு சாரா அமைப்புகளைச் சொந்தமாக
நடத்தி வருபவர்.
உயர்திரு அன்புராஜ்: இந்தியாவிலிருந்து
வந்துள்ள சிறப்பு விருந்தினர். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்துடனும்,
வளர்ச்சிப் பாட பல்கலைக் கழகத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமையக்
காரணமான அமைப்பாளர்; பெரியார் மணியம்மை பல்கலைக் கழக நிர்வாகக் குழு
உறுப்பினர்; திராவிடர் கழகத்தின் பொதுச் செய லாளர்; நாகம்மையார்
குழந்தைகள் காப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.
பாராமவுன்ட் மாகாண(OSU) தலைவருக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
உயர்திரு பெண்டம் வில்லியம்ஸ்:
முன்னாள், மலேசியா, இந்தியாவிற்கான தூதுவர் கானாவில் உள்ள பல
அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கு மான நிர்வாக சபைகளில் அனுபவம் பெற்றவர்.
கானா முதலிய இடங்களில் பொருளாதார, முதலீடு மற்றும் திட்ட நிர்வாகி;
ஆலோசகராகப் பணியாற் றியவர். உயர்திரு பக்காரி சாதிக் நியாரி. கானா நாட்டைச்
சேர்ந்தவர் புராதன கோஞ்சா என்ற இனத்தைச் சேர்ந்தவர். கானாவின் தேசிய நில
கமிஷனின் பொதுப் பணியில் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர்.
உயர்திரு எஸ்.எஸ். பட்டாள்: மேற்கு
ஆப்பிரிக்காவிற்கு ஜனவரி 1959இல் வந்தவர். இந்தியாவிற்கும் -
சைபீரியாவிற்கும் கவுரவ தூதராக நியமிக்கப்பட்டவர். இந்தியாவில் சமுதாயப்
பணிகளைத் தொடர்பவர்.
பெரியார் ஆப்பிரிக்க நிறுவன முதலாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக