ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

அவசர சட்டத்திற்கு ராகுல் எதிர்ப்பு சரியானதே ! சுதர்சன நாச்சியப்பன் ஜிங்கு ஜா ஜிங்கு ஜா



மதுரை : ""குற்றப்பின்னணி எம்.பி.,
எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆதரவாக மத்திய அவர் கூறியதாவது: மத்திய அரசு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதை அமல்படுத்த 1.20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், 78 லட்சம் பேர் பயனடைவர். விவசாயிகளிடமிருந்து 22 ஆயிரம் கோடி டன் உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்படும். போக்குவரத்து, கம்ப்யூட்டர்துறை வளர்ச்சியடையும். ரேஷன் வினியோகத்தை பதிவு செய்ய, வினியோகிக்க 16 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதை கட்டுப்படுத்த, நிதியமைச்சர் சிதம்பரம் கூறிய கருத்துக்கள் சரியானவை. இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.

அரசு அறிமுகப்படுத்திய அவசர சட்டத்திற்கு காங்., துணைத் தலைவர் ராகுல் எதிர்ப்பு தெரிவித்தது சரியே,'' என மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.மதுரையில் இந்திய பொது நிர்வாக நிறுவனம், உற்பத்தித்திறன் கவுன்சில் மற்றும் சமூக அறிவியல் கல்லூரி சார்பில், "இந்தியாவில் உணவு பாதுகாப்பு பிரச்னை, ஆலோசனைகள்' குறித்து கருத்தரங்கு நடந்தது. நிறுவன தலைவர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். எம்.பி.சி., முன்னாள் தலைவர் ராஜகோபால் வரவேற்றார். மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பேசினார்.
குற்றப் பின்னணி எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆதரவாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய அவர சட்டத்தை பரிசீலிக்கும் போதே சோனியா, ராகுல் எதிர்ப்புத் தெரிவித்தனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில், சட்டம் நிறைவேற்றப்பட்டால் பலர் அரசியலில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்படும் என அரசியல் கட்சிகள் கருதின. சட்டத்திற்கு பார்லி., நிலைக்குழு ஒப்புதல் வழங்கியது. புதிய சட்டப்படி, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் எம்.பி.,-எம்.எல். ஏ.,க் களாக இருக்கலாம். பார்லி., சட்டசபை கூட்டங்களில் பங்கேற்கலாம். ஆனால் சம்பளம், சலுகைகள் கிடைக்காது, என்றார்.

கருத்துகள் இல்லை: