ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

மன்மோகன் சிங்கை சமாதான படுத்தும் முயற்சியில் சோனியா ! கத்துகுட்டி ராகுல் செய்த லீலை


குற்ற வழக்கில் தண்டிக்கப்படுகிற எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்களை பதவி பறிப்பிலிருந்து காக்கும் சர்ச்சைக்குரிய அவசர சட்டத்தை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார்.அப்போது அவர், ‘‘அவசர சட்டம் முட்டாள்தனமானது, அதை கிழித்து எறிய வேண்டும். இந்த விஷயத்தில் அரசாங்கம் தவறு செய்து விட்டது’’ என ஆவேசமாகக் கூறினார்.
ராஜினாமா செய்வாரா?
பிரதமர் தலைமையில் மத்திய மந்திரிசபை கூடி எடுத்த முடிவை ராகுல் காந்தி இப்படி விமர்சித்தது, மன்மோகன்சிங்கின் நிலையை பலவீனப்படுத்தி உள்ளதாக கருத்து எழுந்துள்ளது. இதை பாரதீய ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லியும் சுட்டிக்காட்டி உள்ளார்.ராகுல் காந்தியின் கருத்து, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.இந்த பிரச்சினை காரணமாக மன்மோகன்சிங் பதவியை ராஜினாமா செய்வாரா? என்ற கேள்வி எழுந்தது. பா.ஜனதா உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தின. இதையடுத்து அவரை சமரசப்படுத்தும் முயற்சியை ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மேற்கொண்டனர்.

ராகுல் கடிதம்
தனது பேட்டியைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ராகுல் காந்தி இ–மெயில் வழியாக ஒரு அவசர கடிதம் எழுதினார்.அதில் அவர், ‘‘இதை நமது அரசியல் எதிரிகள் தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பது எனக்கு தெரியும். உங்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் மதிநுட்பத்துக்காகவே உங்களிடம் இருந்து தகவல்கள் எதிர்பார்த்திருக்கிறேன். மிக மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் எல்லாம் நீங்கள் உங்கள் நேர்த்தியான தலைமைத்துவத்தினை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் என்பதில் உங்கள் மீது எனக்கு மிகப்பெரிய அபிமானம் உண்டு. எனது கருத்தின் வலிமையை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்’’ என கூறி உள்ளார்.
பிரதமருடன் சோனியா பேச்சு
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள பிரதமர் மன்மோகன்சிங்கிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைபேசி வழியாகப் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. அப்போது மன்மோகன்சிங்கிடம் சோனியா காந்தி, ‘‘கட்சியின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக எப்போதும் இருக்கிறது’’ என ஆறுதலாக கூறினாராம்.இருப்பினும் ராகுல், சோனியா காந்தியின் சமாதான வார்த்தைகளால் மன்மோகன்சிங் சமாதானம் அடைந்தாரா என்பது தெரியவில்லை.அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும்போது பிரதமர் மன்மோகன்சிங் விமானத்தில் பேட்டி அளிப்பார், அப்போது இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கணைகளை தொடுப்பார்கள், அப்போது மன்மோகன்சிங்கின் மனநிலை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: