நரேந்திர மோடியுடன் சந்திரபாபு நாயுடு; பா.ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் சேர வாய்ப்பு?
பாராளுமன்ற
தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய
முற்போக்கு கூட்டணியும், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும்
தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ஆந்திராவில்
இருந்து தெலுங்கானாவை பிரிக்கும் முடிவுக்கு தெலுங்கு தேசம் கட்சி
எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில
நாட்களுக்கு முன் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, பா.ஜனதா
தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்.
அப்போது
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் சந்திரபாபு நாயுடு பேசியதாக
தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த சந்திப்பின் போது கூட்டணி குறித்து எதுவும்
பேசவில்லை என பா.ஜனதா கூறியது.
இந்த
நிலையில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று டெல்லியில்
நடைபெற்றது. இதில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி மற்றும்
மேல்–சபை எம்.பி. ராம் ஜெத்மலானி ஆகியோருடன் சந்திரபாபு நாயுடு ஒரே
மேடையில் கலந்து கொண்டார்.
இந்த
நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு பேசும்போது, ‘‘2014–ம் ஆண்டு பாராளுமன்ற
தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். இல்லையெனில் மீண்டும்
நாம் துயரங்களை அனுபவிக்க நேரிடும்’’ என்று கூறிய அவர், வாஜ்பாய்
தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சாலை வசதி,
செல்போன் இணைப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை பாராட்டினார். இதன் மூலம் தெலுங்கு தேசம், பா.ஜனதா கூட்டணியில் சேர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.nakheeran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக