திங்கள், 14 அக்டோபர், 2013

மலாலா ! தலிபான்களுக்கு தண்ணி காட்டும் புரட்சி தேவதை

பாகிஸ்தானில் தலிபான்களின் கட்டுபாட்டில் அடிக்கடி வந்து போக கூடிய பகுதிதான் ஸ்வாட் பள்ளத்தாக்கு! அந்த பகுதியில், உரிமைகள் மறுக்கபடுவது சர்வசாதாரணம். அதிலும் பெண்கள் நிலை கேவலம் என்றே, சொல்லலாம். இதை எப்படியும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்று விரும்பியது, உலகில் அதிகம் பேரால் கேட்கப்படும் ஒரு வானொலி! அங்கிருந்து கொண்டே, யாராவது தங்களை வெளிபடுத்தி கொள்ளாது தங்கள் நிலையை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால், தலிபான்களின் கொர தண்டனைகளுக்கு மத்தியில், யாரும் அதை கண்டுகொள்ள வெளிவரவில்லை அல்லது செயற்படுத்த முன்வரவில்லை என்றே சொல்லலாம்! அந்த சமயத்தில், என்ன செய்வது என்று தெரியாது இருந்த அந்த வானொலியின் நிர்வாகத்தினரை வந்தடைந்தது ஒரு தினக்குறிப்பேடு.


மிக சிறிய வயதை ஒத்த ஒருவருடைய எழுத்துருக்கள்! உருது மொழியில் நிர்வாகத்துக்கு வந்தடைந்திருந்தது. நினைத்திருந்தால், அலட்சியம் செய்திருக்கலாம் நிர்வாகம்! புனைப்பெயரில் வரையபட்ட அந்த தினக்குறிப்பேட்டையும், அதன் உண்மைத்தன்மையையும், அதை எழுதியவரையும் கண்டறியும் பணியை ஆரம்பித்தார்கள்.

பல அதிர்ச்சி தர கூடிய வகையிலான, விசயங்கள் அந்த தினக்குறிப்பேட்டில் இருப்பதை போல உண்மையாக நடப்பதை உறுதிசெய்து கொண்டார்கள்.

குறிப்பாக, பெண்கள் கல்வி மறுப்பு விடயங்கள், மக்களுக்காக போராடுகின்றோம் என்று சொல்லி கொள்ளும் மதப்போராளிகளின் மக்கள் மீதான சித்திரவதைகள் என்பன, வெளிச்சம் போட்டு காட்டபட்டிருந்தது.

ஆதாரங்களுடன் எல்லாமே இருக்கின்ற போது, அதை வெளியுலகுக்கு கொண்டுவருவதில் என்ன தயக்கம்? வெளிக்கொண்டுவந்து விட்டார்கள். அதனுடன் சேர்த்து, தினக்குறிப்பேட்டை 11 வயதில் எழுதிய மலலா யையும், 14 வயதில். வெளிக்கொண்டு வந்துவிட்டார்கள்.

இதை அறிந்த தலிபான்கள் சும்மா இருப்பார்களா? வெளியுலகுக்கு, ஸ்வாட் பள்ளத்தாக்கு மக்களின் அடிப்படை உரிமைமீறல் பிரச்சனைகள் வெளிவர தொடங்கியதுமே, அதை வெளியிடுபவர் யார்? என்று, தலிபான்கள் தீவிரமாக விசாரிக்க தொடங்கிவிட்டார்கள்.

ஆனாலும், அவர்களால் கண்டறிவதில் சிரமம் இருந்தது. காரணம், அவர்களது தேடல் ஒரு முதிர்ச்சியான அனுபவம் கொண்ட ஒரு நபரை கொண்டதாகவே இருந்தது.

ஒரு நாள் பாகிஸ்தானிய சமூக அமைப்பு ஒன்று ஸ்வாட் பள்ளத்தாக்கில் வாழும் ஒரு சிறுமிக்கு விருது ஒன்றை வழங்குவதாக, செய்தி வெளியாகிய பின்புதான், தாங்கள் தேடுவது ஒரு முதிர்ச்சியடையாத உண்மையான ஒரு மக்களுக்கான போராளியை என்பதை அறிந்து கொண்டார்கள் தலிபான்கள்.

அவர்களை மேலும் கோபமாக்கிய செயல், மலாலா தனக்கான விருதை பெற்றுக்கொண்டு, பாகிஸ்தானிய ஜனாதிபதிக்கு தனது கைப்பட எழுதிய செய்தியில், ஸ்வாட் பள்ளத்தாக்கில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதே ஆகும்.

பாடசாலைகளையே மூட வேண்டும் என்று தலிபான்கள் சொல்லிகொண்டு இருக்க, மலாலா பல்கலைக்கழகங்கள் வேண்டும் என்ற செயல் அவர்களை மிருகங்கள் ஆக்கிவிட, அவளை கொல்ல துணிந்துவிட்டார்கள்.

துப்பாக்கியால் சுட்டதில் கழுத்தில் காயம் பட்டு தப்பியவரை இங்கிலாந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சையில் காப்பாற்றினர். இன்று இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மலலா வுக்கு அந்நாட்டு இளைஞர்களுக்கான அமைதி விருது கொடுத்து கௌரவித்தார்கள்.

அதோடு மனித உரிமைகள் குறித்துநா சபையில் பேசும் வாய்ப்பும் மலலா வுக்கு கிடைத்தது. குறைந்த வயதில் (15) ஐ நாவில் பேசியவர் இதுவரை மலலா ஒருவர் மட்டுமே.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் அறக்கட்டளை இவருக்கு உலகின் சிறந்த மனிதருக்கான விருதையும் கொடுத்து கௌரவித்துள்ளது.

மலலா வின்நா உரையில் அவர் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அது "இளைஞர்களிடம் புத்தகங்களை கொடுங்கள் துப்பாக்கி ஒரு போதும் வேண்டாம்" என்பதே.
பாகிஸ்தான், ஆப்கன் தீவிரவாதிகள் துப்பாக்கியை தூக்குவதற்கு பதிலாக புத்தகங்களை தூக்குவது தான் நாகரீக சமூகத்துக்கு சரியானது என்ற மலலா ஒரு புரட்சியின் வடிவம் தான்  soodram.com

கருத்துகள் இல்லை: