சோனியா
காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தொடர்பான நிலமோசடியை அம்பலப்படுத்திய
ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா மீது மேலும் ஒரு வழக்கு தொடர ஹரியானா அரசு
உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா
மாநில விதை மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக அசோக் கெம்கா
இருந்தபோது, விதைகள் விற்பனை வெகுவாக குறைந்து அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக
அவர் மீது புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய மாநில அரசு
உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக
ராபர்ட் வதேரா நில ஒப்பந்தத்தை அசோக் கெம்கா ரத்து செய்தபோது, அவர் எல்லை
மீறி செயல்பட்டதாக மாநில அரசு தரப்பில் குற்றம் சாட்டியது.
ஹரியானா
மாநிலத்தில் ராபர்ட் வதேராவுக்கு சாதகமாக நிலங்கள் விற்பனை செய்யப்பட்ட
விவகாரத்தில் பெரிய முறைகேடு நடந்ததாக அசோக் கெம்கா அறிக்கை அறித்தார்.
அசோக் கெம்காவின் அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது. இந்த அறிக்கையை தாக்கல் செய்த பிறகு அசோக் கெம்கா, மாநில
அரசால் 40 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக