வியாழன், 17 அக்டோபர், 2013

அழ வைத்த 6 மெழுகுவர்த்திகள்! பல மொழிகளில் ‘அப்பா நான்தான் உங்க பையன். என்ன கூப்பிட்டுபோங்க..

6 candleவே.மதிமாறன்
சமீப நாட்களில் நான் பார்த்த 3 தமிழ் சினிமாக்களில் என்னை அதிகம் நெகிழ வைத்தது, ஷாம் நடித்து வெளிவந்த 6 மெழுகுவர்த்திகள் படத்தில் இடம் பெற்ற இரண்டு காட்சிகள்.
கடத்தப்பட்ட தன் மகனை தேடிப் போபால் நகரத்திற்குப் போன நாயகன், போன இடத்தில் தன் மகன் வயதொத்த ஒரு சிறுமியை அவர்கள் பாலியல் ரீதியாக தொல்லை செய்ய, அந்த சிறுமி தப்பியோட முயற்சிக்கும்போது அவள் எழுப்புகிற கூக்குரல் நம் நெஞ்சை அறுக்கிறது. வெகுடெண்ழுந்த நாயகன், அந்த சிறுமியை காப்பாற்றியதால் தன் மகனை மீட்கும் வாய்ப்பை இழந்து விடுகிறான்.
‘என்ன சார் இப்படி பண்ணிட்டிங்க..? உங்க பையானோட உயிருக்கே ஆபத்தாச்சே..’ என்று உடன் வந்தவர் கேட்க, ‘இவளும் ஒருத்தனடோ பொண்ணுதானே?’ என்று அவன் கதறி அழுதக் காட்சி.. என்னை நிம்மதியில்லாமல் செய்து விட்டது.
படத்தின் கடைசிக் காட்சியில் கல்கத்தாவிற்கு கடத்தி வரப்பட்ட பல சிறுவர்கள் கொத்தடிமையாய் வேலை செய்கிற இடத்தில், தன் மகனை தேடி நாயகன் வரும்போது அங்கிருக்கிற குழந்தைகள் பல மொழிகளில் ‘அப்பா நான்தான் உங்க பையன். என்ன கூப்பிட்டுபோங்க..’ என்று கெஞ்சுவதும் அதை தாங்க முடியாமல் நாயகன் கதறி அழுதபோது, நானும் அழுது விட்டேன். இதை எழுதும்போதும் எனக்கு கண் கலங்குகிறது.
கல்கத்தாவில் நாயகன் அநாதையாக வீதியில் படுத்துக் கிடக்கும்போது அவனை பாதுகாத்து அவன் மகனை தேடித் தருவதில் உறுதுணையாக மிகுந்த அன்பானவராக ஒரு தமிழ் முஸ்லிமை காட்டியிருக்கிறார் இயக்குநர் V.Z. துரை.
முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே காட்டிய தமிழ் சினிமாவில், இப்படி நல்ல முஸ்லிம் காதாபாத்திரம் பல ஆண்டுகள் கழித்து திரையில் பார்த்து மகிழ்சியாய் இருந்தது.
நடிகர் ஷாமின் நடிப்பும் முதிர்ச்சியோடு பக்குவப்பட்ட நிலையிலிருந்தது.

கருத்துகள் இல்லை: