செம்மஞ்சேரி பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்.
சென்னை நகரில் இருந்து இடம் பெயர்க்கப்படும்
குடிசைவாசிகள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக போராடும் நிலை
ஏற்பட்டுள்ளது.
குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான குடியிருப்புகள் கட்டித் தருவதாகக் கூறி குடிசைகளை அப்புறப்படுத்திவிட்டு, புறாக்கூண்டு போன்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்தப்படுகின்றனர். முதலில் இவர்களுக்கு சென்னை நகருக்குள்ளேயே குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டதால் எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பல்வேறு இடங்களில் வசித்து வந்த குடிசைப் பகுதி மக்களை அப்புறப்படுத்திவிட்டு அவர்களை கண்ணகி நகரில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிவைத்தனர்.
இப்போது கண்ணகி நகர் குடியிருப்புப் பகுதிகளில் மட்டும் சுமார் 18,000 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் சுமார் 1 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு சாலை வசதி, மருத்துவ வசதி, பள்ளிகள் என எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
இதேபோல செம்மஞ்சேரி பகுதியிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு குடிசைப்பகுதி மக்கள் குடியமர்த்தப்பட்டனர். இந்த இரண்டு பகுதிகளில் வசிக்கும் மக்களும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் இவை சோழிங்கநல்லூர் மண்டலத்தில் சென்னை மாநகராட்சியின் எல்லைக்கு அப்பால் இருந்தன. இப்போதுதான் இவை சென்னையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
அதன்பிறகே சாலை வசதி ஓரளவுக்கு செய்து தரப்பட்டுள்ளது. ஆனாலும் இதர வசதிகள் எதுவும் இங்கே இல்லை.
மேலும் குடியிருப்புகளை ஒதுக்குவதிலும் முறைகேடுகள் நடைபெறுகின்றன. அரசியல்வாதிகளுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விதிகளுக்கு மாறாக பல குடியிருப்புகள் ஒதுக்கப்படுகின்றன.
வாழ்வாதாரம் இல்லை: குடிசைப் பகுதிகளில் வசித்த பெரும்பாலானோர் ஏழை தலித் மக்கள். இவர்கள் அனைவரும் உடலுழைப்புத் தொழிலாளிகள். சென்னை நகருக்குள் இருந்தபோது, அருகிலேயே கட்டடப் பணிகள் போன்ற கூலி வேலைகளுக்கு சென்று வந்தனர்.
ஆனால் இப்போது சென்னை நகருக்கு வெளியே சுமார் 25 கி.மீ. தொலைவுக்கு அப்பால் இவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதால், வேலையில்லாமல் திண்டாடி வருகிறார்கள். பலர் தினமும் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் சம்பாதிக்கும் ஊதியத்தில் பெரும்பகுதி பயணச் செலவுகளுக்கே போய் விடுகிறது. இதில் பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இப்போது பலர் வேலைக்கு செல்வதில்லை. வாழ்க்கையை சமாளிக்க பலர் தவறான வழிகளில் செல்கின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடரும் வெளியேற்றம்: இந்த நிலையில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள அனுமந்தபுரம், சிவராஜ்புரம், மாட்டாங்குப்பம் "மெரினா' கெனால் தெரு, விக்டோரியா நகர், லாக் நகர், காந்தி நகர், பல்லவன் குடியிருப்பு, நெடுஞ்செழியன் காலனி, ஐந்து குடிசை, அம்மாநகர், மேற்கு கூவம் சாலை, பூதப்பெருமாள் கோயில் தெரு, புதுப்பேட்டை தெற்கு கூவம் தெரு உள்ளிட்ட குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தருவதாகக் கூறி டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் எந்த இடத்தில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரம் இவர்களுக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இதனையடுத்து சென்னையில் இருந்து வெளியேற்றாமல், அதே பகுதியில் குடியிருப்புகளை கட்டித் தரவேண்டும் என்று கோரி அந்த பகுதி மக்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னைக்கு வெளியே குடியிருப்புகள் தரப்பட்டால் தங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும்; எனவே அரசு, உரிய மாற்று வழிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே இவர்களது முறையீடு.
1 லட்சம் பேருக்கு மருத்துவமனை இல்லை
கண்ணகி நகர் பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் எதுவும் இல்லை. தனியார் மருத்துவமனைகள் மட்டுமே உள்ளன.
செம்மஞ்சேரியில் மட்டும் ஒரேயொரு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. ஆனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் அந்த பகுதியில் ஒரு அரசுப் பள்ளி கூட இல்லை.
கண்ணகி நகர் பகுதியில் 2 அரசுப் பள்ளிகள் மட்டுமே உள்ளன. ஆனால் அதில் ஒன்றில் மட்டுமே பிளஸ் 2 வரை உள்ளது.
சமூகநலக் கூடம் ஆக்கிரமிப்பு
கண்ணகி நகர் பகுதியில் சிறியதாக ஒரு சமூகநலக் கூடம் மட்டுமே இருந்தது. ஆனால் அதையும் காவல்துறையினர் ஆக்கிரமித்து காவல்நிலையம் அமைத்துள்ளனர்.
இங்குள்ளவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளை கொண்டாட வேண்டுமென்றால் தெருவில் கொண்டுகிறார்கள். செம்மஞ்சேரியில் அது கூட இல்லை. விளையாட்டுத் திடல், நூலகம், உடற்பயிற்சி கூடம் போன்ற வசதிகளும் இங்கு இல்லை.
சென்னையின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் நாங்கள். ஆனால் எங்களுக்கு சென்னையில் இடம் இல்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர் கண்ணகி நகர் மக்கள். தினமணி,com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக