பஞ்சாயத்து முடிவு
மத்தியப்
பிரதேசத்தில் காதல் ஜோடியை அரைநிர்வாணமாக்கி, மனித கழிவுகளை சுமக்க வைத்த
கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குக்கரியா என்ற
கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தை பெண்களே முன்னின்று நடத்தியுள்ளனர்.
திருமணமான
பெண் ஒருவர், வெறொருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக வந்த புகாரையடுத்து,
கிராமப் பஞ்சாயத்து அவர்களுக்கு இந்த தண்டனையை வழங்கியுள்ளது. கிராமப்
பஞ்சாயத்துப்படி காதல் ஜோடியை மரத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்,
அவர்களது ஆடைகளை கிழித்து எறிந்தனர். அவர்கள் மீது கருப்பு வண்ண சாயத்தை
பூசினர். மேலும் மனித கழிவுகளை சுமக்க வைத்து மூன்று கிராமங்களிலும் தெரு
தெருவாக ஊர்வலகமாக அழைத்துச் சென்றனர். காதலனின் கையில் முரசு ஒன்றை
கொடுத்து, அதை அடித்துக்கொண்டே வர சொல்லியுள்ளனர். அவமானத்தால் நடந்து
சென்ற அந்த ஜோடிகளை பார்த்து, மக்கள் கைதட்டி சிரித்தனர்.
இதுதொடர்பான
புகாரை ஏற்றுக்கொள்ள உள்ளூர் போலீசார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
தங்களது பஞ்சாயத்து தீர்ப்பில் போலீசார் தடையிட முடியாது என்று கிராம
பஞ்சாயத்தார் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த சம்பவம்
தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
காவல்துறை
அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ஜோடியின் தகாத உறவுக்கு பஞ்சாயத்து
தண்டனை வழங்கியுள்ளது. அவர்களை மரத்தில் கட்டி ஆடைகளை அகற்றியுள்ளனர்.
இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழங்குடியன
சமூகத்தில் இத்தகைய சம்பிரதாயங்கள் வழக்கமானவைதான். இதனை மாற்ற நிர்வாகம்
முயற்சி மேற்கொண்டுள்ளது. போலீஸ் நடவடிக்கையால் இத்தகைய செயல்களை
முற்றிலுமாக தடுக்க இயலாது. விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே இவற்றை
தடுக்க முடியும் என்றார்.
சமூக
ஆர்வலர்கள் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். ரஞ்சனா குமாரி என்ற சமூக
ஆர்வலர் இதுகுறித்து கூறும்போது, இதுபோன்ற சம்பவம் இந்த மாநிலத்தில்
அடிக்கடி நிகழ்கிறது. போலீசாரும் இதனை கண்டுகொள்வதில்லை. பெண்களுக்கு
பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை. மிகக்
கொடூரமான, இரக்கமற்ற, மனிதாபிமானமற்ற நடவடிக்கை இது. அரசியல்வாதிகளுக்கு
வாக்கு வங்கி மட்டுமே கவலையே தவிர, சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த
வேண்டும் என்பதில் அக்கறை இல்லை என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக