கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழத்தில் வெற்றி பெற்றுள்ள சமசீர்கல்வி
திட்டத்தை தனது மாநிலத்திலும் அமுல் படுத்த போவதாக அறிவித்துள்ளார், சமுக நீதியின் படிக்கல்லாக இருக்கும் சமசீர்கல்வி தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தால் அறிமுக படுத்தப்பட்டு வெற்றி கரமாக அமுல் படுத்தப்பட்டது , இந்த சமசீர் கல்வியால் தமது வியாபாரம் படுத்துவிடும் என்று எண்ணிய கல்வி கொள்ளையர்களும் , எங்கே தமது மேட்டு குடி மாணவர்களுக்கு இணையாக குப்பனும் சுப்பனும் வளர்ந்து விடுவார்களோ என்ற பயத்தில் முழு மூச்சாக களத்தில் இறங்கி திமுகவை தோற்கடித்தனர்,
அதன் பின் பதவி ஏற்ற அதிமுக அரசு உடனே சமசீர் கல்வியை தடை செய்தது,
அதற்கு எதிராக போராடிய திமுகவும் இதர முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயல்பட்ட கல்வியாளர்களின் விடாத முயற்சியாலும் மீண்டும் சமசீர் கல்வியை அமுல் படுத்துமாறு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது,
இது வரலாறு .மு.சிவகுருநாதன்
சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாஞ்சால், சவுகான், தீபக் வர்மா அடங்கிய அமர்வு இன்று (09.08.2011) காலை 10 .34 மணிக்கு வெளியிட்டுள்ளது. பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று நடப்பாண்டில் தமிழகத்தில் 10 நாட்களில் சமச்சீர் கல்வி பாடத்தை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் உயர்நீதிமன்ற நீதிமன்றத்தில் தலையிடமுடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் ஆணவத்தால் 70 நாட்களாக பெரும் மன உளைச்சலுக்கு ஆள்பட்டிருந்த பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் இத்தீர்ப்பின் மூலம் நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் பாராமுகமாக இருந்தபோதும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட போராட்டம் இன்று வெற்றியடைந்துள்ளது.
நீதி இப்போதாவது வென்றது குறித்து நாமனைவரும் மகிழ்ச்சியடையலாம். ஆனால் நமது போராட்டங்கள் இத்துடன் முடிவடையப் போவதில்லை. இத்தீர்ப்பின் அமலாக்கத்தை கண்காணித்து சமசீர்கல்வி அனைத்து நிலைகளிலும் அமல் செய்யவேண்டிய போராட்டங்களை தொடர்ந்து நடத்தவேண்டிய தேவை இருக்கிறது.panmai2010.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக