புதுடில்லி:"மதிப்புமிக்க இயற்கை வளமான, நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு
செய்ததில், ஏல நடைமுறைகளை பின்பற்றாதது ஏன்?' என, மத்திய அரசுக்கு,
சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.நிலக்கரி சுரங்கங்கள்
ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை, சுப்ரீம்
கோர்ட்டில், நீதிபதி லோதா தலைமையிலான, "பெஞ்ச்' முன் நடைபெற்றது. அப்போது,
மத்திய அரசுக்கு எதிராக, நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அவர்கள் கூறியதாவது:கடந்த, 1992ம் ஆண்டிலிருந்து, நிலக்கரி சுரங்க
ஒதுக்கீட்டிற்காக, என்னென்ன நடைமுறைகளை கடைபிடிக்கப்பட்டன என்பதை, மத்திய
அரசு விவரிக்க வேண்டும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை முடிவு செய்ய, தேர்வு
குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்தச் சட்ட விதியின் கீழ், இந்தக் குழு
அமைக்கப்பட்டது.நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை முடிவு செய்யும் பணியை,
முதலில், இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான, மத்திய சுரங்க
திட்டம் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அதன்பின், ஒதுக்கீடுகளை முடிவு செய்ய, தேர்வு கமிட்டி அமைக்கப்பட்டது ஏன்?நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டது எப்படி? சுரங்க ஒதுக்கீடுகளை முடிவு செய்ய, தேர்வு கமிட்டி பின்பற்றிய நடைமுறைகள் என்ன? மதிப்பு மிக்க இயற்கை வளமான, நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய, ஏல நடைமுறைகளை மத்திய அரசு பின்பற்றாதது ஏன்? இவற்றுக்கு எல்லாம், மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, ""கோர்ட் எழுப்பியுள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், 1992ம் ஆண்டில், தாராளமய கொள்கை பின்பற்றப்பட்டது ஏன்? அதற்கான சூழ்நிலைகள் என்ன என்பது குறித்தும் விவரிக்கப்படும்,'' என்றார். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக