செவ்வாய், 17 செப்டம்பர், 2013

செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி முறைகேடு ! விசாரணை தொடக்கம் ! பவானி சிங்கை மாத்து மாத்துன்னா இதுதான் நடக்கும்

சென்னை: கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில், 200 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன், கனிமொழி மீதான புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., விசாரணையை துவக்கி உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.  அரசியல் காரணக்களுக்காக போடப்படும் வழக்குகள் இதெல்லாம். ஒழுங்காக கனக்கு வைத்துதான் செலவு செய்திருப்பார்கள். பாலிசி மேட்டர் களில் கோர்ட் தலையிடகூடது. அதுவும் தமிழ் வளர்ச்சிக்கு. இவ்வளவு கூட செய்யகூடாத. தைரியமிருந்தால் எல்லா அரசு விழா செலவுகளை அரசு வெளியிடுமா கடந்த 2 ஆண்டுகளில். இதைபோல் பல மடங்கு செய்திருப்பார்கள்




உயர்நீதிமன்ற உத்தரவு:
இதையடுத்து, விசாரணையை துரிதப்படுத்தவும், புகாரில் முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யவும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், பி.ரமேஷ் பாபு, தாக்கல் செய்த மனு: கோவையில், 2010, ஜூன், 23ம் தேதி, செம்மொழி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை, உலக தமிழ் அமைப்பு அங்கீகரிக்கவில்லை. மாநாட்டுக்காக, முன்னாள் முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது; 386 கோடி ரூபாய், ஒதுக்கப்பட்டது. மாநாடு முடிந்த பின், தமிழக அரசின் தலைமைச் செயலர், வெளியிட்ட அறிக்கையில், "மாநாட்டுக்காக, 301 கோடி ரூபாய், செலவிடப்பட்டது' என, கூறியுள்ளார். பணத்தை இஷ்டத்துக்கு செலவிட்டது, ஆச்சரியமளிக்கிறது. தலைமைச் செயலரின் அறிக்கையை என்னால் ஏற்க முடியவில்லை. எனவே, தணிக்கை துறைக்கு மனு அனுப்பினேன். எனக்கு பதில் வந்தது. 151 கோடி ரூபாய், செலவு செய்யப்பட்டிருப்பதாக, தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாறாக, தமிழ் வளர்ச்சித் துறையின் செயலர் அனுப்பிய பதிலில், மாநாட்டுக்காக, 262 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மூன்று பேரும், மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பொது மக்களின் பணத்துக்கு, இவர்கள் தான் பொறுப்பு. பணம் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. முறைகேட்டுக்கு காரணமானவர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த, பிப்ரவரி, மார்ச் மாதங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. அரசுக்கு, 200 கோடி ரூபாய் வரை, இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். என் புகாரை பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இம்மனு, நீதிபதி மாலா முன், விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்பு துறை சார்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம், ""மனுதாரர் அனுப்பிய புகாரில் உள்ள, குற்றச்சாட்டுக்கள் குறித்து, விரிவான விசாரணை நடத்த, டி.எஸ்.பி., முகமது இக்பால் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், விசாரணை நடவடிக்கையை துவங்கியுள்ளார்,'' என்றார்.



அதிகார துஷ்பிரயோகம்:
அதையடுத்து, விசாரணையை துரிதப்படுத்தி, புகாரில் முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்பு துறைக்கு, நீதிபதி மாலா உத்தரவிட்டார். வழக்கறிஞர் ரமேஷ் பாபு அனுப்பிய புகாரில், "செம்மொழி மாநாடு என்கிற போர்வையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான, அன்பழகன், ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் அடங்கிய குழு தான், இந்த நிதி முறைகேட்டுக்கு பொறுப்பு. முதல்வர் பதவியை, அதிகார துஷ்பிரயோகம் செய்து உள்ளார்' என, குறிப்பிட்டுள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை: