வியாழன், 19 செப்டம்பர், 2013

சினிமா விழாவுக்கு 10 கோடியை ஜெயலலிதா வாரிவழங்கினார் ! மிகப்பெரிய ஜால்ரா கச்சேரிக்கு திரையுலகம் தயார்

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.10 கோடிக்கான
காசோலையை தலைமைச் செயலகத்தில் அரசின் சார்பில் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்படத் துறையினர் ஏவி.எம்.சரவணன், கேயார், அமீர், சரத்குமார், சிவகுமார், விக்ரமன், அபிராமி ராமநாதன், டி.ஏ.அருள்பதி, ஆர்.பன்னீர்செல்வம், கே.எஸ்.ராமாராவ், ராஜீவ், எல்.சுரேஷ், ரவி கொட்டாரக்கரா, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், தாமஸ் டிசோசா, காட்ரகட்ட பிரசாத், பொன்.தேவராஜன், ஏ.மோகன் உள்ளிட்டோர்." இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.10 கோடிக்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் அரசின் சார்பில் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்படத் துறையினர் ஏவி.எம்.சரவணன், கேயார், அமீர், சரத்குமார், சிவகுமார், விக்ரமன், அபிராமி ராமநாதன், டி.ஏ.அருள்பதி, ஆர்.பன்னீர்செல்வம், கே.எஸ்.ராமாராவ், ராஜீவ், எல்.சுரேஷ், ரவி கொட்டாரக்கரா, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், தாமஸ் டிசோசா, காட்ரகட்ட பிரசாத், பொன்.தேவராஜன், ஏ.மோகன் உள்ளிட்டோர்.
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை ஒட்டி, தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.10 கோடிக்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. வரும் 24 ஆம் தேதி நிறைவு விழா நடைபெறுகிறது.
நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைத்து விருதுகள் வழங்கவும், நிறைவு விழாவில் தலைமையேற்கவும் முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விழாவுக்கான அழைப்பிதழ்களை முதல்வரிடம் விழாக் குழுவினர் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை அளித்தனர்.
ரூ.10 கோடி பங்களிப்பு: நூற்றாண்டு விழாவில் தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.10 கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் தலைவர் கல்யாணிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அப்போது, திரைப்படத் துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர் dinamani.com

கருத்துகள் இல்லை: