இந்த விநோதம் இதுவரை எந்த வழக்கிலாவது நடந்தது உண்டா? : கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி
:- ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு எதிராக வாதாட
வேண்டிய வழக்கறிஞர் பவானி சிங்கே, அந்தப் பதவியில் நீடிக்க வேண்டுமென்று
குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவே முயற்சிகளில் ஈடுபடுகிறாரே?
பதில்
:- நீதிபதி பாலகிருஷ்ணா இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு முன்பு
திரு. மல்லிகார்ஜுனய்யாவும், வேறு சிலரும் நீதிபதிகளாக இருந்த போது,
அவர்களே தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கேட்காத ஜெயலலிதா,
தற்போது மட்டும் பாலகிருஷ்ணா தொடர்ந்து இந்த வழக்கினை விசாரிக்க
வேண்டுமென்று கோரிக்கை வைப்பது ஏன்?
அதுபோலவே
அரசு வழக்கறிஞரான ஆச்சார்யா பதவி விலகியபோது, அவர் பதவி விலக வேண்டா
மென்றும், தொடர்ந்து அந்த வழக்கிலே அரசு வழக்கறிஞராக நீடிக்க
வேண்டுமென்றும் ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்காதது ஏன்? எங்கேயாவது
கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குற்றவாளியே தன்மீதான வழக்கை குறிப்பிட்ட
நீதிபதிதான் தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்றும், தனக்கு எதிராக
வாதாடக்கூடிய அரசு வழக்கறிஞராக குறிப்பிட்ட ஒருவரே இருக்க வேண்டுமென்றும்
கோரிக்கை வைக்கும் விநோதம் இதுவரை எந்த வழக்கிலாவது நடந்தது உண்டா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக