வெள்ளி, 20 செப்டம்பர், 2013

வெட்கம் ! ஒரு Mob குண்டா பிரதமர் வேட்பாளராக தேசியகட்சிக்கு?

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/jayram.jpg நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதால், நாட்டில் வன்முறை, கலவரங்கள் அதிகம் நடைபெறும் என்று மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
பிரதமருக்கான பந்தயம்
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் இதுதொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:–
பாரதீய ஜனதா அடுத்த பாராளுமன்ற பொதுத் தேர்தலை பிரதமர் பதவிக்கான பந்தய சூதாட்டமாக மாற்ற நினைக்கிறது. ஆனால் காங்கிரசும் இதனையே செய்யாது. காங்கிரஸ் பிரதமர் பதவிக்காக யாரையும் முன்னிலைப்படுத்தாது.

ராகுல்–மோடி
இது ராகுல் காந்திக்கும் மோடிக்கும் இடையேயான போட்டி அல்ல. எங்கள் கட்சி கொள்கை, செயல்திறன், தலைமை ஆகியவைகளின் ஒட்டுமொத்த அடிப்படையில் இந்த தேர்தலை சந்திக்கும். பாரதீய ஜனதா மோடியின் பெயரை கூறி ஓட்டு கேட்கிறது. காங்கிரஸ் தனது திட்டங்களின் அடிப்படையில் ஓட்டு கேட்கும்.
மோடியின் அரசியல் போராட்டம் எப்போதும் மதவாதத்தை உள்ளடக்கியது தான் என கருதுகிறேன். அவரது சகாவான அமித்ஷா உத்தரபிரதேச மாநிலத்துக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதும் அவர் தனது விளையாட்டை காண்பித்துவிட்டார். முசாபர்நகரில் நடந்த கலவரத்துக்கு பாரதீய ஜனதாவின் தூண்டுதல் தான் காரணம்.
கலவரம் அதிகரிக்கும்
நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்காக முன்னிலைப்படுத்துவதால் இதுபோன்ற மேலும் பல மோதல்களும், கலவரங்களும் நடைபெறும் என்று கருதுகிறேன்.
முசாபர்நகர் ஒரு முன்னோட்டம் (டிரெய்லர்) தான். இது முதல் மைல்கல். இதுபோன்ற இன்னும் பல மைல்கற்கள் வரும். மதவாத ஜுரம் படிப்படியாக அதிகரிக்குமோ என்று நான் பயப்படுகிறேன். இந்திய அரசியலின் இதயமாக விளங்கும் உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் கலவரங்களும், வன்முறைகளும் அதிகரிக்குமோ என்று அச்சப்படுகிறேன்.
காங்கிரஸ்–ஆர்.எஸ்.எஸ். போட்டி
பாரதீய ஜனதாவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். தான் முடிவு செய்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. பாரதீய ஜனதா கட்சி வெறும் முகமூடி தான்.
2014–ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தான் காங்கிரஸ் நேரடியாக மோடி என்ற முகமூடியுடன் ஆர்.எஸ்.எஸ்.சுடன் மோதும் முதல் தேர்தல். மோடியின் முகமூடி வளர்ச்சி. இது ஒரு இரட்டை முகமூடி. எனவே இந்த தேர்தல் காங்கிரசுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் அல்ல, காங்கிரசுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தான்.
அரசியல் கட்சியாக
ஆர்.எஸ்.எஸ். தனது முகத்திரையை விலக்கி வெளியே வர இதுவே சரியான தருணம். அரசியல் கட்சியாக பதிவு செய்து கொண்டு, பா.ஜ.க. போன்ற முழு சொந்தமான சந்தாதாரர்கள் வழியாக இல்லாமல் நேரடியாக தேர்தலில் போட்டியிட வேண்டும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை: