சனி, 21 செப்டம்பர், 2013

திண்டுக்கல் சப் கலெக்டர் மதுசுதன் ரெட்டி குடிபோதையில் அட்டகாசம் !கல்லெறிந்தார் ! போலீசின் வாக்கி டாக்கியை பறித்தார் ! கணவனுடன் வந்த பெண்ணை ?

திண்டுக்கல்: போலீஸ்காரரிடம் வாக்கி டாக்கியை பறித்தும், குறைதீர்
கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் மீது கற்களை வீசியும் திண்டுக்கல் சப் கலெக்டர் செய்த நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்ட சப் கலெக்டராக மதுசூதன்ரெட்டி(28) கடந்த ஆக.19ல் நியமிக்கப்பட்டார். இவர் குடும்பத்துடன் திண்டுக்கல் சிறுமலை அருகே கடமான்குளம் கெஸ்ட் ஹவுசில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுமலை அடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை நோக்கி ஒரு தம்பதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அவர்களை வழிமறித்த சப்–கலெக்டர் இரவு நேரத்தில் சிறுமலையில் உங்களுக்கு என்ன வேலை? என அவர்களிடம் கேட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம், உனது மனைவியை நான் பத்திரமாக அழைத்து செல்கிறேன். என்னை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வா என கூறி விட்டு அந்த பெண்ணை தனது காரில் ஏற்றிக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இதனால் வனத்துறை ஊழியருக்கும், சப்கலெக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்ஸை நிறுத்தி டிரைவரிடம் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்தார். இதனால் டிரைவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் அவரின் செல்போனை பறித்து ரோட்டில் வீசி உடைத்ததாக தெரிகிறது.சப் கலெக்டரின் இந்த நடவடிக்கையால் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு வனத்துறையினர் தகவல் கொடுத்தனர்.


தாசில்தார் சுப்பிரமணிய பிரசாத், சப்கலெக்டரின் நேர்முக உதவியாளர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்து கலெக்டருக்கு அறிக்கை அளித்தனர்.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திண்டுக்கல் வடக்கு போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீஸ்காரர் பசுபதி கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு வந்த சப்கலெக்டர், போலீஸ்காரர் வைத்திருந்த வாக்கி டாக்கியை பறித்து கீழே போட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வந்தவர் சப்கலெக்டர் என்பது தெரியாமல் அவரை போலீஸ்காரர் பசுபதி விசாரணைக்காக வடக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் அவர் சப் கலெக்டர் என தெரிந்ததால் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டார்.தொடர்ந்து திண்டுக்கல் ஆர்டிஓ அலுவலகம் வந்த மதுசூதன்ரெட்டி அங்கு கூடியிருந்த மக்களிடம், ‘யாரை கேட்டு அலுவலகத்தில் நுழைந்தீர்கள், உடனடியாக அனைவரும் வெளியேறுங்கள்Õ என சத்தம் போட்டார். மேலும் அவர்கள் மீது சப்கலெக்டர் கற்களை வீசியதாகவும், இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசில் சப்கலெக்டர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

தகவலறிந்த அங்கு வந்த பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்களிடமும் ஆவேசமாக வெளியேறும்படி ச்சலிட்டார். சப்கலெக்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.இச்சம்பவத்தின்போது டிஆர்ஓ. மனோகரன், தாசில்தார் சுப்பிரமணியபிரசாத், சப்கலெக்டர் நேர்முக உதவியாளர் நடராஜன் உடன் இருந்தனர்.இது குறித்து கலெக்டர் வெங்கடாசலம் கூறுகையில், Ôசப்கலெக்டர் குறித்து நேற்று காலை முதல் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. எதனால் சப் கலெக்டர் இப்படி நடந்து கொண்டார் என தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். நானே சப்கலெக்டரிடம் நேரடியாக பேசி பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்Õ என்றார்.இதுகுறித்து சப்கலெக்டர் கூறுகையில், ‘என்னுடைய வேலையை பார்க்க விடுங்கள். என்னை பார்க்க  அனுமதி பெற்ற பின்னர்தான் வரவேண்டும். நான் உங்களை பார்க்க விரும்பினால் நானே அழைப்பேன். மக்கள் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக புகார் அளித்தால் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன்Õ என்றார். dinakaran.com

கருத்துகள் இல்லை: