ஞாயிறு, 23 டிசம்பர், 2012

அன்று கருணாநிதி என்னை வற்புறுத்தினார்

Viruvirupu
என்னை வற்புறுத்திய அவரும் கறுப்பு கண்ணாடிதாங்க போட்டிருந்தார்!
என்னை வற்புறுத்திய அவரும் கறுப்பு கண்ணாடிதாங்க போட்டிருந்தார்!
“ஜெயலலிதாவை விட்டு விலகி, அவருக்கு எதிராக சாட்சியம் சொல்லும்படி கலைஞர் என்னை வற்புறுத்தினார். நான் மறுத்துவிட்டேன். அதன் பின்னரே என்மீது வழக்கு தொடரப்பட்டது” இவ்வாறு பெங்களூரு நீதிமன்றத்தில் தெரிவித்தார், சசிகலா.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது நெருங்கிய தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்ட, அளவுக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில் கலந்துகொண்ட சசிகலா, நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணாவின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது அவர், இந்த வழக்கில் எனது பெயர் இடைச் செருகலாக பின்னர் சேர்க்கப்பட்டது என்றார்.
“கடந்த 1996-ம் ஆண்டு ஜெயலலிதாமீது மட்டுமே வழக்கு போடப்பட்டது. அதாகப்பட்டது என்னை எப்படியாவது கழட்டி விட்டுடுங்க சார் ஜெயா வழக்கை என்னவாச்சும் பண்ணிக்குங்க 
பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து என்னுடைய பெயரும், உறவினர் இளவரசி மற்றும் முன்னாள் வளர்ப்பு மகன் வி.என். சுதாகரன் ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டன.
இதற்குக் காரணம் என்னவென்றால், ஜெயலலிதாவை விட்டு விலகி, அவருக்கு எதிராக சாட்சியம் சொல்லும்படி கலைஞர் என்னை வற்புறுத்தினார். அதற்கு நான் மறுத்து விட்டதால், என்னையும் இந்த வழக்கில் இணைத்து விட்டனர்’’ என்று சசிகலா நீதிபதி பாலகிருஷ்ணாவிடம் கூறினார்.
இது கோர்ட்டில் கூறப்பட்டுள்ளதால், அவணமாக பதிவாகியுள்ளது. பார்க்கலாம், இதற்கு கலைஞர் என்ன கூறப்போகிறார் என்பதை!

கருத்துகள் இல்லை: