பெண்ணுரிமை குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும், ஆணுக்கு சமமாக பெண் மதிக்கப்பட வேண்டும் என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.டெல்லியில்,
ஐ.நா. அமைப்பான யுனிசெப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார
நிகழ்ச்சியின் தொடக்கவிழா நடைபெற்றது. அதில், பிரபல இந்தி நடிகையும்,
தமிழில் தமிழன் படத்தில் நடித்தவருமான பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.
அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:டெல்லியில்
மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம், மிகக்கொடிய குற்றம். குற்றவாளிகளுக்கு
கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். முதல்முறையாக இளைஞர்கள் ஒன்றாக போராட
முன்வந்துள்ளனர். அதே சமயத்தில், போராட்டம் அமைதியாக நடக்க வேண்டும்.பெண்ணுரிமை
குறித்து மறுஆய்வு செய்யப்படுவதை நான் விரும்புகிறேன். நாம் ஆணாதிக்க
சமுதாயத்தில் வாழ்கிறோம். பெண்கள் குறித்த அணுகுமுறை மாற வேண்டும். ஆணுக்கு
சமமாக பெண்களை மதிக்க வேண்டும்.இதுபோன்ற
பிரச்சினைகளில் இந்தி திரையுலகம் உதட்டளவில் மட்டும் குரல் கொடுப்பதாக
கூறுவது தவறு.
திரையுலகினர், இத்தகைய போராட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டாலும், எங்களுக்கும் இந்த உணர்வு உள்ளது. எங்களுக்கு பணிச்சுமை இருப்பதால், போராட்ட களத்தில் எங்களால் இருக்க இயலாது. அதற்காக எங்களுக்கு அப்பிரச்சினைகளில் அக்கறை இல்லை என்று அர்த்தம் அல்ல. நாங்களும் விவாதத்தில் பங்கேற்றுதான் வருகிறோம்.ஆனால், பிரபலமாக இருக்கும் ஒரே காரணத்துக்காக, பாலிவுட் திரையுலகம் குறி வைக்கப்படுவது ஏன் என்று எனக்கு புரியவில்லை. இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக