சிறுமி பாலியல்
பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான
சுரேந்தர் கோலிக்கு மரண தண்டனை விதித்து டெல்லி காசியாபாத் சிபிஐ கோர்ட்
உத்தரவிட்டுள்ளது.
கடந்த
2006-ம் ஆண்டு உ.பி. மாநிலம் நொய்டாவில் உள்ள நித்தாரியில் 5 வயது
சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுரேந்தர்
கோலி மீதான வழக்கு டெல்லி காசியாபாத் சிபிஐ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த
வழக்கின் 24.12.2012 திங்கள்கிழமை நடந்த விசாரணையில் கோலிக்கு மரண தண்டனை
விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
பாலியல்
வன்கொடுமை செய்து பலரைக் கொன்ற வழக்கில் கோலிக்கு இது 5வது மரண தண்டனை
ஆகும். 4 கொலை வழக்குகளில் கோலிக்கு ஏற்கனவே மரணதண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
நிதாரியில்
காணாமல் போன பல பெண்களின் சடலம் 2006ல் ஒரே இடத்தில்
கண்டுபிடிக்கப்பட்டது. கொலைகள் தொடர்பாக மொகிந்தர் சிங், சுரேந்தர் கோலி
ஆகியோர் 2006ல் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சிபிஐ 19 வழக்குகள் பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக