அசிட் வீச்சுக்கு ஆளாகி உயிருக்கு போராடி வரும் வினோதினி இவர்தான் , வாய் கிழிய பேசும் அரசுகள் இவருக்கு இன்னும் போதிய அளவு உதவிகள் வழங்கவில்லை
justi-ce.ve-r-ma@nic.in என்ற இ-மெயில் முகவரியிலும், 011-23092675 என்ற
எண்ணுக்கு பேக்ஸ் மூலமும் ஜனவரி 5ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள்
கருத்துக்களை தெரிவிக்கலாம்.
சென்னை: பெண்கள் பாதுகாப்பு மற்றும் பலாத்கார செயலுக்குரிய தண்டனை குறித்து
பொதுமக்கள் ஜனவரி 5ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என்று நீதிபதி
வர்மா தலைமையிலான குழு அறிவித்துள்ளது.டெல்லியில் ஓடும் பேருந்தில்
மருத்துவ கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து பெரும் கலவரம்
நடந்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீசார் இடையே நடந்த மோதலில் ஒரு
போலீஸ்காரர் இறந்தார். சம்பந்தப்பட்ட மாணவி தீவிர சிகிச்சைப்பிரிவில்
தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பு
குறித்த சட்டங்களை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கிலும்
எழுந்துள்ளது.இதையடுத்து பாலியல் தாக்குதல் வழக்குகளில் விரைந்து நீதி வழங்கவும், தண்டனைகளை அதிகப்படுத்தும் வகையில் நடப்பு சட்டங்களை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்காக முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி லீலா செத், முன்னாள் அரசு வக்கீல் கோபால் சுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்த குழு தனது அறிக்கையை 30 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே வர்மா குழுவினர் நாடு முழுவதும் உள்ள பிரபல சட்ட நிபுணர்கள், சட்ட வல்லுனர்கள், மகளிர் குழுக்கள், சமூக ஆர்வலர்களின் கருத்தை அறிய விரும்புகிறது. எனவே பெண்களுக்கு எதிரான கொடுமைகளை செய்யும் குற்றவாளிகளுக்கான தண்டனைகளை உயர்த்துதல் குறித்து சட்ட திருத்தம் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கலாம். மேலும் justice.verma.nic.in என்ற இமெயில் முகவரியிலும், 01123092675 என்ற எண்ணுக்கு பேக்ஸ் மூலமும் ஜனவரி 5ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.இந்த தகவலை மத்திய அரசு அமைத்துள்ள வர்மா குழு தெரிவித்துள்ளது. .tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக