கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளதால் அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்று கீழவளவு காவல்நிலையத்தில் கையெழுத்திட வந்த துரை தயாநிதியிடம் போலீசார் நேற்று சம்மன் வழங்கினர்.அதில், இன்று காலை 11.30 மணியளவில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று துரை தயாநிதியிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். பேரம் படியலையோ
இந்த விசாரணையின் முடிவில் துரைதயாநிதியை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் துரைதயாநிதி இன்று ஆஜராவாரா அல்லது காவல்துறை சம்மனுக்கு தடை கோரி வழக்கு தொடர்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதனிடையே, ஜாமீன் உத்தரவில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளர்த்தக்கோரி துரை தயாநிதி சார்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளத tamil.webdunia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக