அகமதாபாத்: அனைத்து நவீன வசதிகளுடன்மற்றும் புல்லட் புருப் வசதியுடன்
ரூ.150 கோடி செலவில் முதல்வர் நரேந்திர மோடிக்கான அலுவலகம் தயாராகி
வருகிறது.
தேர்தலில்வெற்றி : குஜராத்
மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான
பா.ஜ., தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது. பல்வேறு
துறைகளில் முதன்மை மாநிலமாக மாற்றிய பெருமையை சேர்த்த மோடி தேர்தல்
சமயத்தில் டுவிட்டர் பேஸ் புக் போன்ற சமூக வலைய தளங்களை பயன்படுத்தி
பிரசாரத்தை மேற்கொண்டார். இவரது பிரசார யுக்தி மாநில மக்களை வெகுவாக
கவர்ந்தது. இதனைதொடர்ந்து அவர் நான்காவது முறையாக முதல்வராக
தேர்ந்தெடுக்கப்பட்டார். வரும் 26-ம் தேதி முறைப்படி மாநில முதல்வராக
பதவியேற்க உள்ளார்.
புல்லட் புரூப் அலுவலகம்:
இதனைதொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக தனது அலுவலகத்தை நவீனப்படுத்தும்
முயற்சியின் ஒரு கட்டமாக ரூ.150 கோடி செலவில் புல்லட் புரூப் அலுவலகம்
கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி மாதத்திற்கு பின்னர் புதிய கட்டடத்திற்கு அலுவலகம் இடம் பெயர உள்ளது.சுமார் 35 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த கட்டம் நான்கு மாடி அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டட பணிகளை சாலை மற்றும் கட்டட துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறைகளாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் அறைகள் கண்காணிப்பு கேமராக மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. தற்போதைய கட்டடத்தில் உருவாக்கப்பட்டுள்ள முதல்வரின் அறை கீழ் தளத்தில் மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல்வரின் அலுவலகம் இருக்கும் பகுதிக்கு நார்த் பிளாக என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ள பகுதிக்கு சவுத் பிளாக் என பெயரிடப்பட்டுள்ளது. டில்லியில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள பகுதி, நார்த் பிளாக் என்றும் மத்திய அரசின் தலைமை செயலகம் அமைந்துள்ள பகுதி சவுத் பிளாக் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இதே பாணியில் தனது அலுவலக பகுதிக்கு பெயர் சூட்டியுள்ள நரந்திரமோடி, தான்தான் பிரதம வேட்பாளர் என்பதைச் சொல்லாமல் சொல்கிறாரோ என்னவோ?

நார்த், சவுத் பிளாக்:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக