செவ்வாய், 25 டிசம்பர், 2012

குஜராத் புதிய எம்எல்ஏக்களில் 134 பேர் கோடீஸ்வரர்கள்

 குஜராத் பணக்கார மாநிலமாகி விட்டது  என்பதற்கு சரியான சான்று வாழ்க மோடியும் அவரது கிரிமினல்களும் 
அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 13, 17ம் தேதிகளில் இரு கட்டமாக நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த வாரம் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 115 தொகுதிகளில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைத்தது. காங்கிரசுக்கு 61 இடங்கள் கிடைத்தன. ‘நேஷனல் எலெக்ஷன் வாட்ச்’ என்ற அமைப்பு புதிய எம்எல்ஏக்களின் சொத்து குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 182 எம்எல்ஏக்களில் 134 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். 86 பாஜ எம்எல்ஏக்களும், 43 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் இதில் அடங்குவர். குஜராத் சட்டசபைக்கு பாஜ சார்பில் மீண்டும் தேர்வான 65 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு 5 வருடங்களில் சராசரியாக 4.66 கோடி அதிகரித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் மீண்டும் தேர்வான 33 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சராசரியாக 5.94 கோடி அதிகரித்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ ஜவஹர் சவுதாவுக்கு அதிகபட்சமாக 64 கோடி சொத்து அதிகரித்துள்ளது. 2007ல் ரூ.18 கோடியாக இருந்த அவர் சொத்து மதிப்பு தற்போது ரூ.82.9 கோடி. இவருக்கு அடுத்த இடத்தில் பாஜ எம்எல்ஏ தினேஷ் படேல் இருக்கிறார். 2007ல் ரூ.4.5 கோடியாக இருந்த சொத்து மதிப்பு தற்போது ரூ.39 கோடியாக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை: