புதன், 20 ஜூன், 2012

பாடகி சுட்டு கொலை தலிபான்கள் வெறியாட்டம்

இசை, நடனம் ஆகியவை மதத்துக்கு எதிரானது என்று கூறி வரும் தலிபான்கள், கைபர் , பக்துங்வா மாநிலத்தில் பாடகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். சமீப காலங்களில் அங்கு பாடகர்கள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. 

  பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகி கஜாலா ஜாவத். பஸ்தோ மொழியில் அவர் பாடல்கள் அடங்கிய ஆடியோக்களும், வீடியோ ஆல்பங்களும் கைபர் , பக்துங்வா மாநிலத்தில் மிகவும் பிரபலம். இந்நிலையில், நேற்று நள்ளிரவு பெஷாவர் நகரின் தாப்கரி பஜாரில் உள்ள அழகு நிலையத்துக்கு தந்தை மற்றும் தங்கை பர்கத்துடன் சென்றார் கஜாலா. பின்னர் வெளியே வந்த அவர்கள் மீது மர்ம நபர்கள் 3 பேர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பினர். இதில் கஜாலாவும், அவரது தந்தையும் குண்டு பாய்ந்து இறந்தனர். பர்கத் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இசை, நடனம் ஆகியவை மதத்துக்கு எதிரானது என்று கூறி வரும் தலிபான்கள், கைபர் , பக்துங்வா மாநிலத்தில் பாடகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். சமீப காலங்களில் அங்கு பாடகர்கள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. ஆனால் கஜாலா கொலையில் அவரது கணவர் ஜாவத் மீது சந்தேகம் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வருடம் ஜாவத்தை பிரிந்த கஜாலா, பெற்றோருடன் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: