ஞாயிறு, 17 ஜூன், 2012

BJP பிரணாப்பின் வெற்றியை மறைமுகமாக ஏற்றுகொள்கிறது

ஜனாதிபதி தேர்தல்: விடியும்வரை ராமாயணம் கேட்ட பா.ஜ.க. (சூரியன் மிஸ்ஸிங்)

Viruvirupu
“ஜனாதிபதி தேர்தலில் ‘கௌரவமான முறையில்’ நடந்து கொள்ளவே பா.ஜ.க. தலைமை விரும்புகிறது” என்றார் அக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர். ‘கௌரவமான முறையில்’ என்பதன் அர்த்தம், காங்கிரஸ் வேட்பாளருடன் போட்டியிட, தாம் ஒரு வேட்பாளரை அறிவிப்பதில்லை என்பதே.
ஐ.மு. கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பதா, இல்லையா என்பது பற்றி பா.ஜ.க. உயர்மட்டக் குழு இன்று முடிவு செய்து அறிவித்துவிடும் என்று டில்லியில் உறுதியாகவே சொல்கிறார்கள். பிரணாப்பை ஆதரிப்பதற்கே கட்சி உயர் மட்டத்தில் பலருக்கு விருப்பம் இருப்பதாக தெரிகிறது.

யாரோ ‘ஒருவரை’ ஆதரிப்போம் என்பது நிச்சயம். ஆள் யாரென்றுதான் தெரியாது!
இதற்கு முக்கிய காரணம், ஒருவேளை பா.ஜ.க. தமது சொந்த வேட்பாளரை நிறுத்தினால், காங்கிரஸ் வேட்பாளருக்கு போட்டியை கொடுத்தோம் என்பதைவிட, வேறு எந்தப் பலனும் கிடையாது என்று பா.ஜ.க. தலைமை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது.
அதாவது, இவர்களது வேட்பாளரால் ஜெயிக்க முடியாது.
இதற்கிடையே அப்துல் கலாம் விவகாரம் ஒரு சிறிய நெருடலை பா.ஜ.க.-வுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. கலாமை பா.ஜ.க. ‘அம்போ’ என்று கைவிட்டு விட்டதாக கட்சிக்குள் சிலருக்கு வருத்தம் உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ்வுடன் இணைந்து கலாமை தமது வேட்பாளராக அறிவித்தபோது, பா.ஜ.க.-வின் முக்கியஸ்தர்கள் சிலருக்கு ஆனந்தம் ஏற்பட்டது. பா.ஜ.க.-வும், கலாமை ஆதரிப்பதாக வேண்டும் என்று கட்சியை வற்புறுத்தியவர்கள் பலர் இருந்தனர்.
ஆனால், முலாயம் பல்டி அடித்து, பிரணாப் பக்கமாக போய்விட, கலாம் என்ற ஆப்ஷனே அடிபட்டுப் போனது. கலாமும் ஒதுங்கிக் கொண்டார் என்று தகவல் உள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக முடிவு செய்வதற்கு, பா.ஜ.க.-வின் ஹை-கமான்ட் கூட்டம் நேற்று மாலை டில்லியில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் நிதின் கட்கரி, மூத்த தலைவர் அத்வானி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டபோதிலும், வேட்பாளர் தொடர்பான எந்த முடிவையும் அவர்களால் எடுக்க முடியவில்லை.
இன்று எப்படியும் ஒரு முடிவு அறிவிக்கப்படும் என பா.ஜ.க. வட்டாரங்களில் உறுதியாகச் சொல்கிறார்கள். பார்க்கலாம், அது என்ன முடிவு என்பதை.

கருத்துகள் இல்லை: